பொருள் : யாது என்னும் வினாப்பெயரின் இறுதியும், சுட்டெழுத்துக்களை முதலாக உடைய ஆய்தத் தொடர் மொழிக் குற்றுகர இறுதியும் அன் சாரியையொடு பொருந்தும்; அவ்வழிச் சுட்டுப் பெயரின் இடைநின்ற ஆய்தம் கெடுதல் வேண்டும். |
ஆய்தத் ‘தொடர்மொழி’ இறுதி என்பதும் கெடுதல் ‘வேண்டும்’ என்பதும் குறைந்து நின்றன. |
எ. டு : யாதனை, £தனொடு எனவும், அதனை, அதனொடு; இதனை, இதனொடு; உதனை, உதனொடு எனவும் வரும். ஏனைய உருபொடும் கூட்டிக் கொள்க. |
சூ. 201 : | ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் |
| சாரியைக் கிளவி இயற்கையு மாகும் |
| ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே |
(29) |
க-து : | திசைப் பெயர்கள் ஏழனுருபொடு புணருங்கால் எய்தும் முறைமை கூறுகின்றது. |
பொருள்: திசைப் பெயரின் முன்வரும் ஏழனுருபிற்கு மேற்கூறிய இன்சாரியை வாராமல் இயல்பாயும் புணர்தலாகும். அவ்வழித் திசைப் பெயரின் இறுதி நின்ற குற்றியலுகரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யொடும் கெடும். |
‘ஆவயின்’ என்றது சாரியை வாராமல் இயற்கையாயவிடத்து என்றவாறு. |
எ.டு: வடக்கண், தெற்கண், கிழக்கண், குடக்கண் எனவரும். குணக்கண், மேற்கண் எனலும் ஆம். உம்மை எதிர்மறையாகலான், வடக்கின்கண், கிழக்கின்கண் எனவருதலே பெரும்பான்மை என்று கொள்க. |
சூ. 202 : | புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் |
| சொல்லிய வல்ல ஏனைய வெல்லாம் |
| தேருங் காலை உருபொடு சிவணிச் |
| சாரியை நிலையுங் கடப்பா டிலவே |
(30) |
க-து: | உருபு புணரியலுக்காவதொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : புள்ளியீற்றுச் சொற்களும் உயிரீற்றுச் சொற்களுமாக மேற்கூறப்பட்டனவும் கூறப்படாதனவுமாகிய எல்லாம் |