நூன்மரபு217
சூ. 205 :

சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்

ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்

(3)
  

க - து :

அகரச்சுட்டு  மெல்லெழுத்துக்களொடு  புணருமாறு  கூறுகின்றது.
 

பொருள் : அகர   ஈறாகிய   சுட்டுச்சொல்லின் முன் ஞநம என்பவை
மொழிமுதலாகவரின், வந்த அம்மெல்லின ஒற்று இடையே மிகும்.
 

எ. டு: அஞ்ஞாண்,  அந்நூல்,  அம்மலர்  எனவரும்.   வரிவடிவைச்
சுட்டி நின்றவழி அஞ்ஞெளிர்த்தது, நீண்டது, மெலிந்தது எனவரும்.
 

சூ. 206 :

யவமுன் வரினே வகரம் ஒற்றும்
(4)
 

க - து:

அகரச்சுட்டு  இடையெழுத்துக்களொடு  புணருமாறு  கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய சுட்டுச்சொல்லின் முன் யகர  வகரங்கள்  வரின்
இடையே வகர ஒற்றுத்தோன்றும்.
 

எ. டு: அவ்யாழ், அவ்வளை எனவரும். வரிவடிவைச் சுட்டி அவ்யாது,
அவ்வளைந்தது எனவரும்.
 

சூ. 207 :

உயிர் முன்வரினும் ஆயியல் திரியாது
(5)
 

க - து :

அகரச்சுட்டு உயிர் முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் : அகரச்சுட்டின் முன்  யகர   வகரமேயன்றி   உயிர் முதன்
மொழிவரினும் மேற்கூறியாங்கு   வகரஒற்று   இடையே   தோன்றுதலாகிய
இலக்கணம் திரிபடையாது. வகரம் ஒற்றிய வழி  அது   குறிற்கீழ்  ஒற்றாய்
நிற்றலின் இரட்டுமென அறிக.
 

எ. டு : அவ்வணி, அவ்வாடை, அவ்விலை  எனவரும். பிறவும் அன்ன
வரிவடிவைச் சுட்டி அவ்வழகிது எனவரும்.
 

 சூ. 208:

நீட வருதல் செய்யுளுள் உரித்தே
(6)
 

க - து :

அதன் முன் உயிர்  வருவழிச்   செய்யுள்   வழக்கிற்குரிய விதி
கூறுகின்றது.
 

பொருள் : உயிர் முதன்மொழியாகி வருமிடத்து   அகரச்சுட்டு  நீண்டு
வருதல் செய்யுள் வழக்கிற்குரியதாகும்.
 

எ. டு:   ஆயிருதிணை  -     ஆயிருபாற்     சொல்   எனவரும்.
 

‘‘வினையெஞ்சு  கிளவியும்  வேறுபல் குறிய’’  (எச்ச-61)  என்பதனான்
‘நீண்டு’ என்னும் செய்தெனெச்சம் திரிந்து