நூன்மரபு218

நின்றது. அன்றி மாத்திரை நீடவருதல் என மாத்திரையை அவாய்நிலையாற்
கொள்ளலுமாம். வரையறையின்மையின் யகர உடம்படுமெய் பெற்றது.
 

சூ. 209 :

சாவ என்னும் செயவெ னெச்சத்து

இறுதி வகரம் கெடுதலும் உரித்தே 

(7)
 

க - து :
 

அகர ஈற்று  வினையெஞ்சு   கிளவிகளுள்   ஒன்றற்குச் சிறப்பு
விதி கூறுகின்றது.
 

பொருள : சாவ   என்னும்   செயவெனெச்சத்திறுதி   நிற்கும்   வகர
உயிர்மெய் கெடுதலும்,   எதிர்மறை   உம்மையாற்  கெடாமல்  பொதுவிதி
பெறுதலும் உரித்தாகும்.
 

எ. டு: சாக்குத்தினான், சாப்புல்லற்பாற்று எனவும்  சாவக்  குத்தினான்
எனவும் வரும்.
 

சாஞான்றான் - சாவோடினான் என மென்கணத்தும் உயிர்க்  கணத்தும்
சிறுபான்மை    கெடுதல்     விகாரமென்க.    அன்றிப்    புறனடையாற்
கொள்ளலுமாம். இறுதி வகரம் என்பதற்கு இறுதியும்  அதனாற்  பற்றப்பட்ட
வகரமும் எனப் பொருள்கூறின்   ‘‘உரித்தே’’   என்னும்  பயனிலையொடு
இயையாமை அறிக. வேற்றுமை நயங்கருதிக் கூறுமிடத்தன்றி உயிர்மெய்யை
ஓரெழுத்தாகக் கோடலே  இவ்வாசிரியர் கருத்து என்பது முன்னும் பின்னும்
இவ்வாறு கூறுவனவற்றான் அறிக.
 

சூ. 210 :

அன்ன என்னும் உவமக் கிளவியும் 

அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் 

செய்ம்மன என்னும் தொழிலிறு சொல்லும் 

ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் 

செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் 

செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் 

அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும் 

பலவற் றிறுதிப் பெயர்க்கொடை உளப்பட 

அன்றி யனைத்தும் இயல்பென மொழிப 

(8)
 

 க-து:

அகர  ஈற்றுள்   ஒருசார்   சொற்களுக்கு   மேல்   எய்தியது
விலக்குகின்றது.
 

பொருள்: அன்ன   என்னும்    உவம     உருபிடைச்   சொல்லும்,
அண்மையிடத்தைச் சுட்டி நிற்கும் விளியேற்ற  அகர   ஈற்றுச்  சொல்லும்,
செய்ம்மன என்னும் வாய்பாட்டான் வரும் வினை முற்றுச் சொல்லும், ஏவற்
பொருளைக்கருதி முன்னிலைக்கண்