நூ. 215. பலசில என்பன அகரம் நீங்கிப் பல் சில் என வருதல் மொழியியலுக்கு மாறானது. பல்சில் என்பவை லகரஈற்று அளவைப் பெயர்களாகும் என்று குறிப்பிடும் இவ் ஆசிரியர் 369 நூற்பா உரையுள் பஃறாழிசை, பஃறொடை என விதி ஈறாகி நின்ற லகரத்திற்கும் இஃதொக்கும், ஏற்புழிக்கோடல் என்பதனான் இத்திரிபு குறில்வழி நின்ற லகரத்திற்கும் இஃதொக்கும், ஏற்புழிக் கோடல் என்பதனான இத்திரிபு குறில்வழி நின்ற லகரத்திற்கே யாகும் என்று கூறுவது பொருந்துமா என்று ஆராயத்தக்கது.27 |
நூ.218. சாரியைப்பேறு வல்லெழுத்துப் பேற்றினை விலக்குதல் தொடர்பான சில செய்திகள்: ஆசிரியர் விரவுப் பெயர், தொடக்கங்குறுகும் பெயர், சுட்டு, வினாப்பெயர், அளவுப் பெயர் இவற்றை விதந்தோதியே முடிப்பார். நீ, நின் என்றாகிப் பொருட்புணர்ச்சி பெறும். சுட்டுமுதலிறுதி, அதன் என்றாற் போன்றாகிப் பொருட்புணர்ச்சி பெறும். இவை பொது விதியான் கொள்ளப்பெறும் வல்லினம் மிகுங்கொல் என்ற ஐயத்தை அறுத்து நின், அதன் என்றாற்போல னகர ஈற்றனவாகியே வருமொழியொடு புணரும் என்பதற்காக வல்லெழுத்துப் பேறு விலக்கப்பட்டது. கோ அஃறிணைப் பெயராதலின் ஒன் சாரியை பெற்றுப் புணரும், அது சாரியை பெறாமல் பொதுவிதியான் ஒகர எழுத்துப் பேற்றொடு வல்லெழுத்து மிக்கு வருதலும் கூடுமோ என்று ஐயுறாமைக்குச் சாரியை பெற்ற நிலை ஒன்றே அதற்குண்டு என்பதனை விளக்க அதிகார வல்லெழுத்து விலக்கப்பட்டது. |