வல்லினம் இயல்பாகப் புணரும் என்னும் அதிகார இலக்கணத்தொடு இவை பொருந்தாமையும் பலசில என்பவை தொடர் மொழியாகாமையும் புலனாகும். |
சூ. 214: | தொடரல் இறுதி தம்முன் தாம்வரின் |
| லகரம் றகரஒற் றாதலும் உரித்தே |
(12) |
க-து: | லகர உயிர் மெய்யீற்றுப் பன்மைப் பெயர்க்குரியதொரு விதி கூறுகின்றது. |
பொருள் : மூன்றெழுத்து முதலாகத் தொடரும் தொடர் மொழியல்லாத ஈரெழுத் தொருமொழிகளாகிய லகர ஈற்றுச் சொற்கள் தம்மொடு தாம் வந்து புணருங்கால் லகர உயிர்மெய் றகரப் புள்ளியாதலும் உரித்தாம். |
றகர ஒற்றாதல் என்றதனான் லகரம் உயிர்மெய் என்பது பெறப்படும். இதனானும் உயிர்மெய்யை ஆசிரியர் ஓரெழுத்தாக வைத்துக் கூறும் முறைமை புலப்படும். உம்மை எதிர்மறை. |
லகரம் என்றும் தொடரல்லிறுதி என்றும் கூறியதனான் குறிக்கப் பெற்றவை, பலசில என்பது பெறப்படும். |
எ. டு: பற்பல-சிற்சில எனவரும். உயிர்மெய் புள்ளி மெய்யாகத் திரிதலின் லகரம் றகரமாகும் என்னாமல் றகர ஒற்றாதலும் என விளங்கக் கூறினார். |
சூ. 215 : | வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும் |
(13) |
க-து : | மேற்கூறிய சொற்கள் ஈறுதிரியாவிடத்து எய்துவதொருவிதி கூறுகின்றது. |
பொருள்: பல சில என்னும் பன்மைப் பெயர்கள், ஈறு திரியாமல் தம்மொடு தாம் வரின் அகர ஈற்றுப் பொதுவிதி பெறாமல் வல்லெழுத்து இலக்கணம் உறழ்ச்சியாகத் தோன்றும். |
எ. டு: பலப்பல-சிலச்சில எனவும் பலபல-சிலசில எனவும் வரும். |
இனி, இவ்இரு நூற்பாக்களின் சிறப்புரைகளுள் உரையாளர் அருத்தாபத்தியானும், ‘இயற்கை’ என்ற மிகையானும் பல்கடல், பல்சேனை, பல்யானை, பல்வேள்வி, பன்மீன், பஃறுளி, பல்லறம் என வருவனவற்றை அடக்கிக் கூறியுள்ளனர். அதனாற் பல, சில என்பவையே அகரம் நீங்கிப் பல், சில் என நின்றன என்பது அவர்தம் கருத்தாகும். அக்கருத்து மொழியியலுக்கு மாறானதாகும். |