நூன்மரபு226

பொருள்: ஆகார  ஈற்றுப்   பெயர்  அல்வழிக்கண்  அகர  ஈற்றிற்கு
ஓதிய  இயல்பிற்றாய்ப்   புணரும்  என்றது;  கசதபக்கள்   வரின்   மிகும்
என்றவாறு.
 

எ. டு: தாராக்  கடிது,     சிறிது,     தீது,     பெரிது   எனவரும்.
  

சூ. 222 :

 செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் 

அவ்வியல் திரியா தென்மனார் புலவர்

(20)
 

க - து:

ஆகார  ஈற்று  வினையெச்சச்சொல்  ஒன்று   மேற்கூறிய  விதி
பெறும் என்கின்றது.
 

பொருள்: ‘செய்யா’   என்னும்   வாய்பாட்டு வினையெச்சச் சொல்லும்
மேற்கூறிய ஆகார ஈற்றுப்பெயர் போலக் கசதபக்கள்  வரின்  மிக்குமுடியும்
என்று கூறுவர் புலவர்.
 

எ. டு: உண்ணாக்   கொண்டான்,   சென்றான்,  தந்தான், போயினான்
எனவரும்.  உண்டு   கொண்டான்   என்பது  பொருள்.  இச்சூத்திரத்தாற்
‘‘செய்யா’’ என்னும் வினையெச்ச   வாய்பாடு   ஒன்று   உண்டு என்பதை
உடம்பொடு புணர்த்தலான் கொள்ள வைத்தார்.
 

இனி, உரையிற் கோடல் என்னும் உத்தியான்  அறியாப் பொருள்வயின்
எனவும் வினைவேறுபடாப்  பலபொருள்  ஒருசொல்  எனவும்  உண்ணாக்
கொற்றன், வாராக் கொற்றன் எனவும் எதிர்மறைப்  பெயரெச்சம் ஈறுகெட்டு
மிக்கு வருதலை அடக்கிக் கொள்க.
 

சூ. 223 :

உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி 

மெய்ம்மை யாக அகரம் மிகுமே

(21)
 

க - து:

உம்மைத்தொகை  மொழி  ஒன்றற்குச்  சிறப்புவிதி  கூறுகின்றது.
 

பொருள : ஆகார  ஈறாய்  நின்று  உம்மைப் பொருள்படத் தொக்குப்
புணரும் இருசொற்றொகை மொழிகளின் இடையே பொருண்மை உடையதாக
ஓர் அகரம் தோன்றி முடியும்.
 

பொருண்மையாவது தொக்குநின்ற  உம்மையினது  பொருளாம்.  மிகும்
என்றது தோன்றும் என்னும் பொருட்டாய் நின்றது.
 

எ. டு:  உவாஅப்பதினான்கு,      இரா    அப்பகல்    எனவரும்.
 

இவற்றின்கண்   அகரம்   தோன்றாதாயின்   பதினான்கு   உவாக்கள்
என்றும் இரவானது பகல், இல்லாதபகல் என்றும் கவர்பொருள் படுமென்க.