xxix
 

நாட்பெயரைப்  பற்றிய நாட்பெயர்க்கிளவி... கெடுதல் என்மனார் புலவர்
என்ற  நூற்பாவின் இறுதியடி நாட்பெயர் ஏனைப்பெயர்போல அத்தின்மேல்
ஒற்றுமெய் கெடுதல் என்ற பொது விதிபெறும் என்பதனை வலியுறுத்துகிறது.
வலியுறுத்தாத வழி பொதுவிதி  இதற்கு  ஏலாது.  ஆடூ+மகடூ+உயர்திணைப் பெயராகலானும் ஏழென்கிளவி எண்ணுப்பெயராகலானும் இவை  பொதுவிதி
ஏலா. சே என்மரப்பெயர் மெல்லெழுத்து மிகுதலைக் கூறிப் பின் சே என்ற
பெயர்  பெற்றம்  என்னும்  பொருளில் வரின் இன்சாரியைபெறும் என்றார்.
ஆண்டு  இன்சாரியை  புணரியல்  நிலையிடைப் பொருள் நிலைக்கு உதவ
வந்த  சிறப்பிற்று  ஆதலின்  அப்பொருள்  நிலைக்கு உதவாத பொதுவிதி
இதற்கு  ஏலாது.  அதிகார   வல்லெழுத்து   ஆசிரியர்   விதந்து  கூறும்
உயர்திணைப்பெயர்   முதலியவற்றிற்கு  ஏலாது.  அக்கருத்து ஏற்புடையதா
என்பதனை ஆய்ந்து கொள்க.28
 

நூ.223. அல்வழி என்று பொதுவாகக் கூறின் எழுவாய்த் தொடரே எனக்
கூறும் ஆசிரியர், அதனை விலக்கி உம்மைத்  தொகையைச்  சுட்டிக் கூறும் நூற்பாவின்  மிகைச்  சொல்  கொண்டு  வேற்றுமைக்கண் அகர எழுத்துப்
பேறு பெறாது என்று தனிவிதியால் (நூ.227)  விலக்கிய  பொழுது  குறித்து
வரும்  இரா   என்ற   சொல்  இராஅக்  கொடிது  என்னும்  எழுவாய்த்
தொடர்க்கண் அகரம் பெறும் என்று கூறுவது சிறப்புடையதாக இல்லை.29
 

நூ.227. இவ்வாசிரியர்  கருத்துப்படி அகர ஈற்றதாகிய  செய்யாத  என்ற
வாய்பாட்டுப் பெயரெச்சத்தைச் சார்ந்த இராத என்ற சொல் ஈறுகெட்டு இரா
என்று  நின்ற  வீதியீற்று  நிலைக்குப்  புணர்ச்சி  விதி  கூறப்பட்டதாயின்
உரையாசிரியன்மார்   விதியீற்றுச்   சொற்களாக   ஆண்டாண்டு  எடுத்து
மிகையால் அடக்கிக் கூறும் புணர் நிலைகளை ஏற்றுக் கோடற்கண் இழுக்கு என்னை.30
 

நூ.229. “யாமரக் கிளவியும்’’ யாவென்ற  வினாப்  பெயரை  நீக்குதற்கு
யாமரக் கிளவியும் என்றார் என்று விளக்கந் தந்துள்ளார் ஆசிரியர். வினாப்
பெயர்களை  விதந்தோதியே  முடிப்பார்  அச்சொல்  யாவென்  வினாவும்
(நூ. 224) என முன்னரே ஓதப்பட்டுவிட்டது ஆதலின் இவ்விளக்கம் தேவை
 


28. இலக்கணக் கோட்பாட்டுரை நூலுள் விளக்கமாகும்.
 

29. வேறு இடம் புலப்படாமையின் ஈண்டு அடக்கப்பட்டது.
 

30. ஒப்பன வற்றை மறுக்கவில்லை.