எ. டு: உப்பின்றுபுற்கை உண்கமா கொற்கையோனே (இளம்பூரணம் மேற்கோள்-238) எனவரும். தன்னினம் முடித்தல் என்னும் உத்தியான், அன்றி என்னும் வினை எச்சச் சொல்லிற்கும் இவ்விதி கொள்க. |
எ. டு: வாளன்று பிடியா வன்கண் ஆடவர் (புறநானூறு-124.) எனவரும். ‘‘தொன்றியல் மருங்கின்’’ என்றதனான் இவ்விதி உலக வழக்கிற் கெய்தாதென்க. |
சூ. 238 : | சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே |
(36) |
க - து: | மேலே இனியணி என்னும் சூத்திரத்து வல்லெழுத்தொடு புணருமாறு கூறினமையின் ஈண்டு முற்கிளந்தற்று என்றது ‘‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்’’ என்பது முதலாக அகரச்சுட்டிற்கு (சூ. 205, 206, 207, 208) ஓதியவற்றை என உணர்க. |
பொருள்: இகர எழுத்தாகிய சுட்டிடைச்சொல் புணருமியல்பு மேல் இயல்புகணத்தொடு புணரும் அகரச்சுட்டிற்கு ஓதிய தன்மைத்தேயாம் என்றது. மெல்யெழுத்துவரின் மிகுதலும் இடை எழுத்தும் உயிரெழுத்தும் வரின் வகர ஒற்றுத் தோன்றுதலும் செய்யுட்கண் மாத்திரை நீண்டிசைத்தலும் இதற்கும் ஒக்கும் என்றவாறு. |
எ.டு: இஞ்ஞான்று, இந்நூல், இம்மலர் எனவும் இவ்யாழ், இவ்விரல், இவ்வணி, இவ்வாடை எனவும் ஈவயினான-ஈயிடை நின்றான் எனவும் வரும். “ஈகாண்டோன்றும்” என்பது ஈன் என்னும் சுட்டுப் பெயரின் ஈற்றழிவாகும். அதனைப் புறனடையாற் கொள்க. (ஈன்-இவ்விடம்) |
சூ. 239 : | பதக்கு முன்வரினே தூணிக் கிளவி |
| முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே |
(37) |
க - து: | இகர ஈற்று அளவைப் பெயர் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. |
பொருள் : தூணி என்னும் சொல், தனக்கு முன்னர்ப் பதக்கு என்னும் சொல்வரின், முன்னர் வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கிளந்தோதிய இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். எடுத்தல் என்பது சொல்லுதல் என்னும் பொருட்டாய் நின்றது. |
எ. டு: தூணிப்பதக்கு எனவரும். வருமொழி தம்மகப்பட்ட அளவையாகாமையின் விதி வேறு ஓதப்பட்டதென்க. தூணித்தூணி எனத் தன்முன்னர்த் தான் வருமிடத்தும் வல்லெழுத்து மிகுதல் கொள்க. மற்றும் இதனானே இவ்வீற்று |