எ.டு: நீ குறியை, சிறியை, தீயை, பெரியை எனவும் பீகுறிது, சிறிது, தீயது, புறத்தது எனவும் மீகண், செவி, தலை, புறம் எனவும் வரும். |
மீகண்-கண்ணின் மேற்பகுதியாகிய உறுப்பு. கண்மீ என்பது மீகண் என மாறிநின்று கண்ணின் ஒரு பகுதிக்குப் பெயராக நிற்றலின் அல்வழியாயிற்று. கண்ணினது மேலிடம் என விரித்தற்கேலாமை அறிக. |
இனி, மேலிடத்துக்கண் எனவிரித்து, வேற்றுமை முடிபு என்று கூறுவர் உரையாசிரியன்மார். ஆசிரியர் அல்வழியும் வேற்றுமையும் ஒருங்கு கூறாராகலின் அவர் கருத்துப் பொருந்தாதென்க. |
சூ. 251 : | இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் |
| உடனிலை மொழியும் உளவென மொழிப |
(49) |
க - து: | மேற்கூறிய மூன்றனுள் மீ என்பதற்கு ஒருபுறனடை கூறுகின்றது. |
பொருள்: இடத்தை வரைந்துணர்த்தும் சொல்லாகிய மீ என்பதன் முன் வல்லெழுத்து மிகும் உடனிலை மொழிகளும் உள எனக் கூறுவர் புலவர். உடனிலை மொழிகள் என்றது தொகைமொழிகளைப் போல ஒன்றி நிற்கும் மொழிகளை. |
எ. டு: மீக்கொடி-மீப்பல் எனவரும். இவை இருபெயரொட்டுப் பண்புத்தொகையைப் போலக் கொடியினது மேற்பகுதியையும் பல்லினது மேற்பகுதியையும் உணர்த்தி ஒருசொல் நீர்மைத்தாய் நிற்குமாறு கண்டு கொள்க. |
உம்மையை வல்லெழுத்தென்பதனொடு கூட்டி மீங்குழி, மீந்தோல் எனச் சிறுபான்மை மெல்லெழுத்து மிகுதலும் கொள்க. |
சூ. 252 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே |
(50) |
க - து: | ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. |
பொருள்: ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகாரஈற்று அல்வழிக்கோதிய தன்மைத்தாய்க், கசதபக்கள் வரின் மிக்குமுடியும். |
எ.டு: ஈக்கால், சிறகு, தலை, புறம் எனவும் தீக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். |