xxx |
யின்று. யாமரக் கிளவியும் என்ற உம்மையான் ஏனையவும் மரப்பெயர்கள் என்பதனைப் பெறவைத்தார் என்றார். அடுத்த நூற்பாவில் மாமரக் கிளவியும் ஆவும் மாவும் என்று உம்மை பிறவற்றையும் தழுவி வருதலின் உம்மையால் மரம் என்று ஏனையவற்றைப் பெறப்பட வைத்தல் என்ற விளக்கம் சிறப்பதாக வில்லை.31 |
நூ. 230. உருபின் முடிபவை ஒக்கும் பொருட்புணர்ச்சிக் கண்ணும் என்பது ஆசிரியர் கருத்தாயின் அதனை ஒரு நூற்பாவில் வெளிப்படையாகச் சுட்டியிருப்பார். அதனை விடுத்து ஒரு சிலவற்றையே உருபியலொடு மாட்டெறிந்து (நூ. 253, 263, 281, 294, 320, 322, 324, 338, 419, 422) கூறுதலின் உருபின் முடிபவை எல்லாம் பொருளினும் ஒக்கும் என்பது ஆசிரியருக்கு உடன்பாடாகுமா என்பது ஆராயத்தக்கது.32 |
நூ. 233. உம்மை எதிர்மறை யாகலின் ஆப்பீ என்றுமாம். என்பதே ஆசிரியர் நச்சினார்க்கினியர் பாடம் அச்சுப்பிழையே ஆன்பீ என்பது.33 |
நூ.239. தூணிப்பதக்கு-வருமொழி தம்மகப்பட்ட அளவை யாகாமையின் வேறு ஓதப்பட்டது என்க என்றார். தம்மகப்படுதல் தமக்கு இனமாய்த் தம்மில் குறைந்தவை என்று நூ. 164ல் இவரே உரை கூறியுள்ளார். தூணி நான்கு மரக்கால் அளவு பதக்கு இரண்டு மாக்கால் அளவு. எனவே தூணிப்பதக்கு என்பதன் கண் வருமொழி தன்னகப்பட்ட தன் இனச்சொல்லேயாம்.34 |
நூ.243. உதி மரப்பெயராயின் என்னாது உதிமரக்கிளவி என்றலின் உதித்தல் என்னும் தொழிலன்றி மரத்தினை உணர்த்தி நின்ற சொல் என்பது பொருத்தமின்று என்றார். |
|
31. ஆசிரியர் விதந்து கூறியுள்ளமையின் இவ்விளக்கம் தரப்பட்டது. |
32. பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப (சூ. 132) என்னும் நூற்பாவின் ‘நோக்கு’ உருபிற்கோதிய இலக்கணம் ஏற்றபெற்றி பொருட்புணர்ச்சிக்கும் ஆகும் எனப் புலப்படுத்தலே, என்பது எனது கருத்து. சூ. 253. முதலிய நூற்பாக்களில் வல்லெழுத்துப் பற்றி மாட்டெறிந்து கூறியமைபற்றி 218ஆம் நூற்பா உரையுள் ஓரளவு தரப்பட்டுள்ளது. |
33. அச்சுப் பிழையாயின் மறுப்பில்லை. |
34. ஆசிரியர் காலத்து வழக்குத் தெரியவில்லை. இதுவே எனின் அவ்விளக்கத்தை விட்டுவிடலாம். |