எ. டு: ஊனக்குறை, செறிவு, தளர்வு, பொலிவு எனவரும். ‘தக்கவழியறிதல்’ என்பதனான் இவ்விதி இயல்புகணத்தும் ஏற்பனவற்றொடு பொருந்திவருதல் கொள்க. எ. டு: ஊன் ஞாற்சி; ஊனஞாற்சி, மெலிவு, யாக்கை, வளர்ச்சி எனவும் ஊன் அழகு, ஆட்சி எனவும் வரும். |
அக்குச் சாரியையும் ஆறாவதன் உருபையும் வேறுபடுத்துணர்க என்பார். ‘தக்கவழியறிதல்’ என்றார். |
சூ. 271 : | ஆடூ மகடூ ஆயிரு பெயர்க்கும் |
| இன்னிடை வரினும் மான மில்லை |
(69) |
க-து : | ஆடூவும் மகடூவும் இன்சாரியை பெறுமென்கின்றது. |
பொருள்:ஆடூ மகடூ என்னும் அவ்இரண்டு உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்து மிகுதலேயன்றி, இடையே இன்சாரியை வரினும் குற்றமில்லை. உம்மை எச்ச உம்மை. |
எ. டு:ஆடூவின்கை; மகடூவின்கை, செவி, தலை, புறம் எனவரும். |
சூ. 272 : | எகர ஒகரம் பெயர்க்கீ றாகா |
| முன்னிலை மொழிய என்மனார் புலவர் |
| தேற்றமும் சிறப்பும் அல்வழி யான |
(70) |
க-து : | எகர ஒகர ஈறுகள் புணருமாறு கூறுகின்றது. |
பொருள் :எகரமும் ஒகரமும் முறையே தேற்றமும் சிறப்புமாகிய பொருள் பற்றி வருதலல்லாவிடத்துப் பெயர்ச் சொற்களுக்கு ஈறாகவாரா. வினைச்சொல்லுள் ஏவலாகிய முன்னிலை மொழியினவாகிக் கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்று கூறுவர் புலவர். |
இச்சூத்திரம், வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்னும் உத்திக்கும், ஞாபகங்கூறல் என்னும் உத்திக்கும் இனமாம். அஃதாவது, எஎன வருமுயிர் மெய்யீ றாகாது (மொழி-38) ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே (மொழி-39) தெளிவின் ஏயும் சிறப்பின் ஓவும் அளபின் எடுத்த இசைய என்ப (இடை-13) என்பவற்றான் அவை ஏகார ஓகாரங்களின் அளபெடையாய்ப் பெயர்க்கு ஈறாவனவன்றித் தாமே ஈறாகா வாரா என்பதும் |