xxxi
 

ஒடு  மரக்கிளவி - ஒடு   என்ற   நோயை  நீக்குவதற்கு ஒடு  மரக்கிளவி
என்றார்   என்பர்   ஆசிரியர்   நச்சினார்க்கினியர்.  அக்கருத்துப்  பற்றி இவ்வாசிரியர் யாதும் குறிப்பிடவில்லை. நீ என்  ஒரு  பெயர் - நீ என்னும்
முதனிலைத் தொழிலை நீக்க  ஒரு  பெயர்  என்றார்  (நூ. 179)  பூ  என்
ஒருபெயர்   -   பூ   என்பது   பொலிக   எனப்  பொருள்தரும்  ஏவல்
வினையுமாகலின்  (நூ. 268)  குமிழ்  என்கிளவி -  குமிழ் என்னும்  சொல்
தொழிற் பெயரன்றி மரப்பெயராயின்  (நூ. 386)  எனத்  தொழிற்   பெயர்
வினைமுற்று இவற்றை ஒருபெயர் கிளவி என்பன விலக்கித் தெளிவுபடுத்தும்
என்பதைத் தாமும் உடன்  பட்டாராதலின் உதி என்ற முதனிலைத் தொழிற்
பெயரை ஏற்றுக் கோடற்கண் இழுக்கிருப்பதாகத் தோன்றவில்லை.35
 

நூ.244-45: புளிச்சுவையை நீக்கப் புளிமரக்கிளவி எனவும் புளியமரத்தை
நீக்க  சுவைப்புளி  எனவும்  ஆசிரியர்  நச்சினார்க்கினியர்   விளக்கத்தில்
குறைவு  இருப்பதால் புலப்பட  வில்லை.  இயற்பெயர்  ஆகுபெயர்  என்ற
ஆராய்ச்சி ஈண்டைக்குத் தேவையின்று.36
 

நூ.251: மீக்கொடி - கொடியின் மேற்பகுதி. மீப்பல்-பல்லின்  மேற்பகுதி.
இவற்றை   இருபெயரொட்டாக   விரித்துப்பொருள்    கூறப்பெறவில்லை.
மீப்பாய்களையாது  -  (புறநா.  30)  மேலே   விரிக்கப்பட்டபாய்  என்றே
உரைகொள்ளப்பட்டுள்ளது. மீகண்:  கண்ணின் மேற்பகுதியாகிய  உறுப்பு -
கண்மீ-மீகண்  என்று  மாறிற்று  கண்ணின்  ஒருபகுதிக்குப்  பெயராகலின்
அல்வழியாயிற்று.    இவ்வாசிரியர்   இச்சொற்களின்  பொருளை  ஆறாம்
வேற்றுமைப் பொருள் கொண்டே விளக்கிப்பின் இவை அல்வழி என்கிறார்.
தமிழில் முன் பின்னாகத் தொக்க  ஆறாம்  வேற்றுமைத் தொகையெல்லாம்
வடமொழியில் எழுவாய் வேற்றுமையாம்  (பி.வி.21)  இக்கருத்து  ஆசிரியர்
தொல்காப்பியனார்க்கு உடன்பாடோ என்பது ஆராயத்தக்கது.
 

நூ. 260:  மிகும்   என்ற  சொல்லினை  ஆசிரியர்  தொல்காப்பியனார்
மிகூஉம்  என்று   அளபெடையாய்ப்   புணர்த்தமை   நோக்கி   ஏனைய
சொற்களின் உகரமும் வரூஉம், தரூஉம், படூஉம் என்று
 


35. விதந்து  கூறப்படும்   பல  பொருளொரு  சொல்  ஒரு  கூற்றதாக
வன்றித்  தமிழ்ச்சொல்லும்  வடசொல்லுமாக  இணைந்து வருதல் நேரிதாகா
தென்பது எனது கருத்து.
 

36. புளி  என்பது  பலபொருளொரு  சொல்லன்றென்று உணர்த்துவதே இதன் நோக்கமாகும்.