‘‘அகமென் கிளவிக்குக் கை முன் வரினே’’ | (புள்ளி-20) | ‘‘இலமென் கிளவிக்குப் படுவரு காலை’’ | (புள்ளி-21) | ‘‘உரையசைக் கிளவிக் காவயின் வரூஉம்’’ | (மொழி-1) | ‘‘இருமொழிக் குரித்தே’’ | (மொழி-42) | | ‘‘எகர ஒகரம் பெயர்க்கீ றாகா (உயிர்மய-70) எனக் குவ்வுருபு வன்றொடர்க் குற்றியலுகரமாக நின்று புணர்ந்தது. | இதனது இதுவெனும் அன்ன கிளவியும் | (வேற்-18) | | நாளது சின்மையும் இளமைய தருமையும் (அகத்-42) என அது உருபு உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாக நின்று புணர்ந்தது. ஏனை இன் ஆன் கண் முதலியவற்றையும் இவ்வாறே ஆசிரியர் கூறியுள்ளமை கண்டு கொள்க. அவ்வாற்றான் ஐயுருபு - ‘புலியைக் கொணர்ந்தான், கனியைத் தின்றான், நீரைப் பருகினான், யானையைப் பார்த்தான்’ எனவும் சாரியையொடும் கூடி ‘ஊரினைக்கண்டான், யாழினைப் பெற்றான், கொடியினைப் பார்த்தான்’ எனவும் வரும். |
சூ. 281 : | சுட்டு முதலிறுதி உருபியல் நிலையும் | (79) | |
க-து : | ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :சுட்டெழுத்தினை முதலாகக் கொண்ட ஐகார ஈற்றுப் பெயரிறுதி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் உருபிற்கு ஓதிய இலக்கணத்தான் நிலைபெறும். என்றது; வற்றுச்சாரியை பெற்றுப் புணருமென்றவாறு. | எ. டு:அவையற்றுக்கோடு; இவையற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். | வருமொழி வரையாது கூறினமையின் சாரியைப் பேறு இயல்புகணத்தும் கொள்க. எ.டு : அவையற்று நெஞ்சு, வயிறு, அழகு எனவரும். வற்றின் வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது. | சூ. 282 : | விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் | | ஆமுப் பெயரும் சேமர இயல | (80) | க-து : | ஐகார ஈற்றுச் சிலமரப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது. | பொருள் :விசை என்னும் மரத்தை உணர்த்தும் சொல்லும் ஞெமை, நமை என்னும் மரப்பெயர்களும் ஆகிய மூன்று பெயர்ச் சொல்லும் சேஎன்னும் மரத்திற்கு ஓதிய இலக்கணத்தனவாம். |
|
|