சூ. 289 : | ஓகார இறுதி ஏகார இயற்றே | (87) |
| க-து : | ஓகார ஈற்று அல்வழிப்புணர்ச்சி ஆமாறு கூறுகின்றது. | | பொருள் :ஓகார இறுதியாகிய பெயர்கள் அல்வழிக்கண் கசதபக்கள் வரின் ஏகார ஈற்று இயல்பிற்றாகும். | எ. டு:ஓக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். (ஓ-மதகு நீர்த்தாங்கும் பலகை) | சூ. 290 : | மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் | | கூறிய வல்லெழுத் தியற்கை யாகும் | (88) | க-து : | ஓகாரஈற்று இடைச் சொல் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. | | பொருள் :எதிர்மறைப் பொருளை எச்சமாகக் கொள்ள நிற்கும் ஓகாரமும் வினாப்பொருள்பட நிற்கும் ஓகாரமும் ஐயப்பொருள் தந்து நிற்கும் ஓகாரமும் வல்லெழுத்துமிகாமல் இயல்பாகும். | எ.டு :யானோ கொண்டேன்?, சென்றேன், தந்தேன், போயினேன் எனவும்; நீயோ கொண்டாய்?, சென்றாய், தந்தாய், போயினாய் எனவும்; காடோ, கடறோ, புற்றோ, புதரோ எனவும் வரும். |
சூ. 291 : | ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே | (89) | |
க-து : | ஒழியிசை ஓகாரத்திற்கு மேற்கூறிய விதி பொருந்துமென்கின்றது. | | பொருள்:ஒழியிசை ஓகாரத்தின் நிலையும் மேல்மொழிந்தவற்றின் இயல்பிற்றாய்க் கசதபக்கள்வரின் மிகாது இயல்பாகும். | எ.டு:கொளலோ கொண்டான், செலலோ சென்றான் எனவரும். கொண்டுய்யப் போயினானல்லன் என்பது பொருள். | இனித், தன்னின முடித்தல் என்னும் உத்தியான், பிரிநிலையாயும் தெரிநிலையாயும், சிறப்பாயும், எண்ணுநிலையாயும் வரும் ஓகாரமும் இயல்பாதல் கொள்க. | எ. டு:யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே எனவும் நன்றோ தீதோ அவர் கண்டது எனவும் ஓஒ கொண்டான் எனவும் (சிறப்பின் ஓ ஆதலின் ஒகரம் தோன்றிற்று) குன்றுறழ்ந்த களிறென்கோ, கொய்யுளைய மாவென்கோ எனவும் வரும். ஈற்றசை ஓகாரத்திற்கும் இஃதொக்கும். |
|
|