சூ. 292 : | வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே | | ஒகரம் வருதல் ஆவயி னான | (90) | க.து : | ஓகார ஈற்று வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாமாறு கூறுகின்றது. | | பொருள்:ஓகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் மேற்கூறிய அல்வழி இயல்பிற்றாகும்; ஆயினும் அவ்விடத்து ஓர் ஒகரம் தோன்றி வருதல் வேண்டும். | எ.டு :ஓஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் கோஒக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். |
சூ. 293: | இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் | (91) | | க-து : | கோ என்னும் சொல் இல்என்பதனொடு புணர்தற்கண் எய்தும் சிறப்பு விதி கூறுகின்றது. | | பொருள் :கோ என்னும் ஓகார ஈற்றுச் சொல்லை ‘இல்’ என்னும் சொல்லொடு கூட்டிச் சொல்லின் ஒகரந் தோன்றாது இயல்பாகப் புணரும். ஏற்புழிக்கோடல் என்பதனான் ‘கோ’ நிலைமொழி எனக் கொள்க. | எ.டு :கோவில் எனவரும். கோயில் எனவும் வரும் கோயில்=அரசனது இல்லம் என்பது பொருள். |
சூ. 294 : | உருபியல் நிலையும் மொழியுமா ருளவே | | ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும் | (92) | க-து : | ஓகார ஈற்றுச்சொல் சில, உருபியலிற் கூறிய விதிபெறும் என்கின்றது. | | பொருள் :ஓகார ஈற்றுச் சொற்களுள் உருபு புணர்ச்சிக்கு ஓதிய இலக்கணத்தான் நிலைபெறும் சொற்களும் உள. அவ்விடத்து வல்லெழுத்து மிகாது இயல்பாகும். | எ.டு :கோஒன்கை, செவி, தலை, புறம் எனவரும். ஏனைய வந்துழிக் கண்டு கொள்க. | சூ. 295 : | ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர் | | அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும் | | வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே | | அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் | | செவ்வி தென்ப சிறந்திசி னோரே | (93) | க-து : | ஒளகார ஈற்றுப் பெயர் இருவழியும் புணருமாறு கூறுகின்றது. |
|
|