புள்ளியீற்றின்முன் உயிர்முதன் மொழிவரின் எய்தும் இலக்கணம் பற்றிப் பொதுவகையான் புணரியலுள்ளும் (புண - 35) தொகை மரபினுள்ளும் (தொகை - 18) பெறப்படுதலின் ஈண்டுப் புள்ளியீறு நின்று உயிர்மெய்ம் முதன்மொழிகளொடு புணருமாறு பற்றி முதற்கண் கூறத் தொடங்குகின்றார். | சூ. 296 : | ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் | | அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் | | வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே | | உகரம் வருதல் ஆவயி னான | (1) | க-து : | ஞகார ஈறு இருவழியும் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. | | பொருள்:ஞகாரத்தை ஈறாக உடைய முதனிலைத் தொழிற்பெயர், அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண்ணும், தன்முன்னர் வல்லெழுத்து வந்து புணரின் அவ்வெழுத்துமிகும், அவ்விடத்து நிலைமொழிக்கண் ஓர் உகரம் வருதலைச் செய்யும். | எ. டு:உரிஞுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இவை அல்வழி, உரிஞுக் கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவரும். இவை வேற்றுமை. |
சூ. 297 : | ஞநமவ இயையினும் உகரம் நிலையும் | (2) | | |
க-து : | ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் மென்கணத்தொடும் இடைக்கணத்தொடும் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :மேற்கூறிய ஞகர ஈற்றுத் தொழிற்பெயர், வன்கணமேயன்றி ஞநமவ என்பவற்றை முதலாக உடைய சொற்கள் வந்து இயையினும் உகரம் வந்து நிலைபெறும். | எ. டு:உரிஞு ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்; ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும். யகரத்தொடும் உயிர்க்கணத்தொடும் புணருமாறு தொகைமரபினுள் பெறப்படுதலின் ‘ஞநமவ’ எனவிதந்து கூறினார். |
சூ. 298 : | நகர இறுதியும் அதனோ ரற்றே | (3) | |
க-து : | நகர ஈற்றுச்சொற்களும் மேற்கூறியாங்குப் புணருமென்கின்றது. | | பொருள் :நகர ஈற்றுச் சொல்லிறுதியும் மேற்கூறிய ஞகர ஈற்று விதியொடு ஒருதன்மைத்தாம். |
|
|