நூன்மரபு261

என்றது;  உகரம்  பெறுதலும்,  கசதபக்கள்  வரின் மிகுதலும், ஞநமவக்கள்
வரின்  மிகாது  இயல்பாதலும்  ஆம்:  வேற்றுமைக்கு விதி மேல் விதந்து
கூறுதலின் இஃது அல்வழிக் கென்பது பெறப்படும்.
 

எ.டு : பொருநுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும், ஞான்றது, நீண்டது,
மாண்டது,  வலிது  எனவும்  வரும். ‘வெரிந்’  என்பதனொடும் இவ்வாறே
கூட்டுக.
 

சூ. 299 :

வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும்(4)
 

க-து :

நகர ஈற்றுப் பெயர்க்கு வேற்றுமைப் புணர்ச்சி கூறுகின்றது.
  

பொருள் :மேற்கூறிய நகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்
உகரம் கெட அகரம் வந்து நிலைபெறும்.
 

எ.டு :பொருநக்  கடுமை,  சிறுமை,  தீமை,   பெருமை  என  வரும்.
‘‘உகரங்கெட’’  என்றதனான் ‘‘உயவல் யானை  வெரிநுச் சென்றன்ன’’ என
உகரம் கெடாது நிற்றலும் கொள்க.
 

சூ. 300 :

வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி

வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை

(5)
 

க-து : 

வெரிந்  என்னும்  பெயர்க்கு  எய்தியதன்மேற்  சிறப்பு  விதி
கூறுகின்றது.
 

பொருள் :  வெரிந்   என்னும்   சொல்லிறுதி   மேற்கூறிய  சாரியை
எழுத்தொடு   உடன்கெடுமிடத்து  மெல்லெழுத்து  வருதலாகிய  இடனும்
உடையதாகும்.
 

கெடும்  என்பதற்கு  இதுவே    விதியாகக்  கொள்ள  வைப்பாராய்க்
“கெடுவழி” என்றார். எனவே  கெடுவழி என்பதற்குக்,  கெடும் கெட்டவழி
எனப் பொருள் விரித்துக் கொள்க.
 

எ.டு :வெரிங்குறை,  வெரிஞ்சிறப்பு,  வெரிந்தளர்ச்சி, வெரிம் பொலிவு
எனவரும்.
 

‘இடனுடைத்தே’   என்றதனான்   ‘வெயில்   வெரி(ந்)   நிறுத்த’  என
மெல்லெழுத்து   வரக்   கெடுதலும்,  வெரிந்யாப்பு,  வெரிந்உயர்ச்சி  என
யகரமும் உயிரும்  வரும்வழிக் கெடாமையும் கொள்க. இன்னும் அதனானே
வெரிநு  ஞாற்சி,  மாட்சி,  வலிமை  என  இயல்புகணத்து  உகரம் பெற்று
வருதலும் கொள்க. வெரிந் = முதுகு.