xxxii
 

அளபெடுக்கும்  என்றார்  ஆசிரியர்  நச்சினார்க்கினியர். உகர ஈறு பற்றிய
நூற்பாவில்  உடம்பொடு  புணர்த்ததை  உட்கொண்டு   மிகும் - மிகூஉம்
என்றாயினமை போலத் தரும் வரும் படும் என்பனவும் ஆகும் என்பதனை
இயைபுபற்றிக்  கூறினார்.  அச்சொற்களை  ஈண்டுக்  குறிப்பிடாது  விடின்
வேறுயாண்டுக் குறிப்பிடுதல் கூடும் என்பதும் ஆராயத்தக்கது. குறில் நின்ற
இடத்தும்  அளபெடை   வரும்   என்ற   அடுத்த  நூற்பாவின்  இயைபு போலப்பிறிதோரியைபு நூலில்யாண்டும் இன்று.37
 

நூ.269. ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்தில்  ஊன் என்ற சொல்லும் வழங்கத்  தலைப்பட்டமையின்  ஊ  என்பதே  இயல்பான  பெயர். னரகம் எழுத்துப்பேறு   என்பதனைச்சுட்ட    ஊ   என்   ஒருபெயர்  என்றார்.
திரிபுவகையான் அமைந்த ஊ என்ற சுட்டுநீட்ட இடைச்சொல்லை நீக்குதற்கு
ஊ என்ஒருபெயர் என்றார் என்ற விளக்கம் ஆராயத்தக்கது.
 

நூ.295.  அவ்விரு  வீற்றும் என்றே நூற்பாத் தொடர் அமைந்திருத்தல்
வேண்டும். அவ்விரு  ஈற்றும்  எனின்  அத்தொடர் அவ்வீரீற்றும்  என்றே
புணர்ந்தமையும்.  இஃது  உம்மைஎச்சம்  இருவீற்றானும்  (சொல். 436-நச்.)
என்பது போல்வது. இரு ஈற்றானும் என்று  பிரித்துப்  பொருள்  கொள்வது
தொல்காப்பியர் கருத்துக்கும்  479ஆம்  நூ. இவ்வாசிரியர்  குறிப்பிட்டுள்ள
சிறப்பு விளக்க உரைக்கும் முரணாவது நோக்கத் தக்கது.38
 

நூ. 299.  உக்கெட  என்பதற்கு  உரகம்  கெட்டவழி  என்று  பொருள்
செய்தல் செவ்விது. நூ. 374 ல் உகரம்  கெடுவழி அகரம் நிலையும்  என்று கூறப்பட்டுள்ள   செய்தி   நோக்கத்தக்கது.  எனவே  உகரம்  கெடாதவழி மேற்கூறிய விதியேபெறும் என்பது.39
 


37. இத்தகையன   செய்யுளிசையளபெடையாவன   வன்றிப்   புணர்ச்சி
விகாரமாகா என்பதே ஈண்டுச் சுட்டப்பட்டது.
 

38. ‘வீறு’   என்னும்   குறிப்புரிச்   சொல் - பகுப்பு - பிரிவு- வகை -
கூறு என்னும்  பொருளுடையதாகும்.   உரையுள்   அவ்வாறே   பொருள் வரையப்பட்டது. மற்று ஈறு என்னும்  பெயர்ச்  சொல்லும்  அப்பொருள்பட
வருமென்பதை   உணர்த்த   அங்ஙனம்   பிரிக்கப்பட்டது.  இதன்  பயன் வேற்றுமையியல் 3ஆம் நூற்பாவின் விளங்கும். ‘இரு+ஈறு’ என்பவை  ஈரீறு எனப் புணர்வதே விதியாயினும்  ஒரு+ஆறு என்பவை ஓராறு  (ஓராற்றான்) ஒருவாறு எனவும் வரும் வழக்காறு நோக்கி இலக்கணங் கொள்ளப்பட்டது.
 

39. உரையினது கருத்தும் அதுவே.