உரையாசிரியன்மார் இச்சூத்திரத்துமிகையான் மண்ணப்பந்தம், எண்ண நோலை எனப்பிற பெயர்கள் அகரச்சாரியை பெறுதலையும் கவண்கால், பரண்கால் என வேற்றுமைக்கண் திரியாது வருதலையும் உருபு ணகரம் திரிதலையும் அடக்குவர். | ஆசிரியர் கிளைப்பெயரெல்லாம் என விதந்து கூறியுள்ளமையான் அகரச்சாரியை பெறுதலையும் வேற்றுமைக்கண் இயல்பாதலையும் புறனடையாற் கொள்ளல் நேரிதாம். உருபு திரிதல் எடுத்தோத்தானே அமையும் எனமேல் விளக்கப்பட்டது. | சூ. 308 : | வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர் | | வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே | (13) | க-து : | எண்(எள்) என்னும் பெயர்க்காவதோர் மரபு கூறுகின்றது. | | பொருள் :எண் என்னும் உணவுப்பொருளை உணர்த்தும் பெயர், அல்வழியாற் புணருமிடத்து வேற்றுமைக்குரிய இலக்கணத்தொடு நிற்றலும் உரித்தாகும். | எ. டு:எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். உம்மையால் எண் கடிது என இயல்பாக வருதலும் ஆம். |
சூ. 309 : | முரண்என் தொழிற்பெயர் முதலியல் நிலையும் | (14) |
| க-து : | முரண் என்னும் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :பண்பை உணர்த்தாமல் தொழிலை உணர்த்தி வரும் முரண் என்னும் தொழிற்பெயர் பொதுவிதியாக முன்னர்க் கூறிய இலக்கணத்தான் நிலைபெறும். என்றது; அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் டகரமாகத் திரிந்தும் நிற்கும் என்றவாறு. | எ.டு :முரண் கடிது, சிறிது, தீது, பெரிது என அல்வழியிலும் முரட்கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வேற்றுமையிலும் வரும். தொழிற்பெயராயினும் இச்சொல் உகரம் பெறாது வரும் என்பது கருத்து. | முரண் என்னும் சொல், இருளும் ஒளியும் தம்முள் முரணாகும்: என்புழிப்பண்பாயும் மன்னர் தம்முள் முரணிப் போரிட்டனர்: என்புழித் தொழிலாயும் நின்றவாறு காண்க. இதனைத் ‘‘தொழிற்பெய ரெல்லாம்’’ (சூ. 306) என்பதன் பின்வையாது ஈண்டு வைத்தார். முரண் கடுமை எனத் திரியாத வழி நிலைமொழி பண்புப்பெயர் எனவும் முரட்கடுமை எனத் திரிந்த வழி நிலைமொழி தொழிற் பெயரெனவும் தெரிந்துகோடற் கொள்க. |
|
|