நூன்மரபு268

சூ. 314 :

அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்(19)
 

க-து :

மகர ஈற்று அல்வழிப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள் :மகர  ஈற்றுச் சொற்கள் எல்லாம் அல்வழிப் புணர்ச்சிக்கண்
மெல்லெழுத்தாகும்.
 

‘மெல்லெழுத்தாகும்’  என்றதனான்  வருமொழி  வல்லெழுத்து என்பது
பெறப்படும்.  வல்லெழுத்துவரின்  திரியுமெனவே  ஏனைக் கணங்கள்வரின்
மேல்  வேற்றுமைக்கு  ஓதிய விதிகளுள் ஏற்பன பெற்றுப்புணரும் என்பது
உய்த்துணரப்படும்.
 

‘‘அல்வழி யெல்லாம்’’ என்றதனான்  தொகையின் கண்ணும், தொடரின்
கண்ணும்,  ஈறுகெட்டு  விதியீறாக  நிற்ப,  வரும்  வல்லெழுத்து மிகுதலும்,
இடையெழுத்து  வரக்  கெடாது  இயல்பாதலும்,  உயிர்வர  உடம்படுமெய்
பெற்றுப் புணர்தலும் பிறவுமெல்லாம் கொள்ளப்படும்.
 

எ. டு:மரங்குறிது,  சிறிது,  தீது,   பெரிது  எனவும்;  மர   நீண்டது,
அகரமுதல்  எனவும்;  மரம்யாது,  மரம்வலிது  எனவும்; கொல்லும்யானை,
ஆய்தவெழுத்து    எனவும்;  வட்டத்தகடு,   நீலக்கண்,   ஆய்தப்புள்ளி
எனவும் வரும்.
 

சூ. 315 :

அகமென் கிளவிக்குக் கைம்முன் வரினே

முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும்

வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க

மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான 

(20)
 

க-து :

அகம் என்னும் சொல் கை  என்பதனொடு புணருங்கால் எய்தும்
நிலை மொழித் திரிபு கூறுகின்றது.
 

பொருள் :அகம்  என்னும் சொல் முன்னர்க் கை என்னும் சொல்வரின்
முதற்கண் நிற்கும் அகரம் தான் கெடுதலினின்று ஒழிய அதற்கு முன்னின்ற
ககர  உயிர்  மெய்யும்  மகர  ஒற்றும்  கெடுதலும்  ஆசிரியர்க்கு  நீக்கும்
நிலைமைத்தின்று, அவ்விடத்துக், கை என்பதற்குரிய மெல்லெழுத்துமிகும்.
 

எ. டு:அகம்+கை = அங்கை  எனவரும். பொதுவிதியான் மகரம் கெட்டு
நிற்பவும்  முன்னவை  என  அதனையும்  அடக்கிக்கேடு  கூறினமையான்
அகஞ்சிறை எனற்பாலது அஞ்சிறை என வருதலும் கொள்க.