xxxiv |
நூ. 327. மேனை என்ற சொல் ஆசிரியராற் பிறாண்டு ஆளப்பெற வில்லை. அச்சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டதாயின் பொருள் மயக்கமின்றித் தெளிவுபெறும். |
நூ. 332. ஞான்று, காலத்தைக் குறித்துவரும் சாரியை. ஊசல் ஊர்ந்தாட ஒரு ஞான்று வந்தானை (கலி. 37) எனச் சான்றோர் செய்யுளுள் ஞான்று காலப் பொருளதாய் வந்துள்ளது, மகத்து ஞான்று கொண்டான் (மேற்கொண்டான்) என்ற எடுத்துக்காட்டுப் பொருந்துமாறில்லை என்ற கூற்று ஆராயத்தக்கது.42 |
நூ.335. எகர ஒகரம் பெயர்க் கீறாகா - என்ற நூற்பாவில் முன்னிலை மொழி மிகுதற்கு விதி கூறாமல் அடுத்த நூற்பாவில் மேற்கூறியற்கை வல்லெழுத்துமிகாஅ என்ற தொடரால் முன்னிலை மொழிமிகுதற்கு விதி புலப்படுத்தாற்போல னகர ஈற்றுத் தொழிற்பெயர்ப் புணர்ச்சிக்கு விதி கூறாது மின்னும் பின்னும் என்ற நூற்பாவில் தொழிற் பெயரியல என்ற தொடரால் னகர ஈற்றுத் தொழிற் பெயர்கள் போலப் புணர்ச்சி விதிபெறும் என்று புலப்பட வைத்ததனையும் ஞாபகங்கூறல் என்ற உத்திவகைக்கு இனமாகக் கொள்ளலாம். |
நூ.342. மிகுதியொடு உறழும் என்றதொடர் குறிப்பிடும் மிகுதி யொடு இயல்பாகும் என்ற பொருள் உறழும் என்ற சொல்லாலே பெறப்படுதல். நூ. 395. ஆல் புலப்படும். இறுதியொடு என்பது உருபு மயக்கமாய் இறுதிக்கண் என்று பொருள்படும் ஆதலின் இறுதியொடு உறழும் என்ற பாடத்தின்கண் இழுக்கு ஏதுமின்று. மிகுதியொடு உறழும் என்ற பாடத்திற்குச்சிறப்பு ஏதுமின்று.43 |
நூ. 391. எழாயிரம் எனக் குறில்வழி ழகரங் கூடாது என்பதனை உட்கொண்டு அதனை ஏழாயிரமாகக் கொள்ளுபவர் ஒராயிரம் இராயிரம் என்ற புணர்ப்புக்களை உடன்பட்டதன் பொருத்தம் ஆராயத்தக்கது.44 |
நூ. 393. ஐ அம் பல் - விகுதி பற்றிக் கூறும் வடமொழி மரபு ஒரோவழி தமிழின்கண்ணும் கொள்ளுதலும் ஏற்புடைத்து |
|
42. ஞான்று என்பது நாளன்று (நாட்பொழுது) என்பதன் மரூஉவே; சாரியையன்று என்பது என் கருத்து (அஞ்ஞான்று-அந்நாட்பொழுது) |
43. உறழ்தல் என்பது திரிபு மூன்றற்கும் உரிய சொல்லாகலின் மிகுதலும் மிகாமையுமாகிய உறழுதலை வரைந்துணர ‘மிகுதியொடு’ என்ற பாடம் கொள்ளப்பட்டது. |
44. ‘‘அர் ஆர்ப என வரூஉம் இறுதி’’ என்றாற் போல இடைச் சொல்லாகவேனும் வரும். ழ கரம் எவ்வாற்றானும் குறிற்கீழ் வாராமை கருதப்பட்டது. |