xxxv |
என்பதனைக் காட்டுவதாகும். ‘பின்முன் கால்கடை’ என்ற சொற்படல நூற்பாவுமது.45 |
நூ. 454. முந்தையது என்பதற்கு முன்னின்ற வடிவு என்ற பழைய உரையாசிரியன்மார் கொண்ட பொருளே சிறக்கும்.46 |
நூ. 469. குற்றியலுகரம் என்பது திரிந்ததன் திரிபு பிறிது என்பதனால் முற்றியலுகரமேயாம். குற்றியலுகரம் என்ற இச்சொல்லைத் தவிர இதனைக் குற்றியலுகரமென்று கோடற்கு முன்னைய இயைபு ஏதும் இன்று. அறாயிரம் இருவகை வழக்கினும் இல்லாததொன்று என்னும் இவ்வாசிரியர், முவ்வாயிரம் முவ்வட்டி என்று விதிப்படி புணர்ந்தவற்றுக்கு இருவகை வழக்கினும் இன்று சான்று காட்ட இயலுமா? தம் காலத்து இருவகை வழக்கினும் இல்லாதவற்றைப் பண்டை உரையாசிரியன்மார் குறிப்பிட்டனர் என்று கோடல் ஏற்புடைத்தா என்பது ஆராயத்தக்கது. உயிர் ஏறி முடியும் குற்றியலுகரம் மெய்யை நிறுத்திக்கெட்டது என்று கூறுவதனால் கிட்டும் பயன் ஏதேனும உண்டா? குற்றியலுகரம் மெய்யொடும் கெடும் என்பதனை நூ. 201, 430, 433, 437 என்பவற்றுள்ளும் முற்றியலுகரம் மெய்யொழித்துத் தான்மட்டும் கெடுதலை நூ.176லும் குறிப்பிடும் ஆசிரியர் ஈண்டுமாத்திரம் குற்றியலுகரம் மெய்யொழித்துக் கெடும் என்று கூறுவாரா என்பதும் ஆய்ந்து கொள்ளத்தக்கது.47 |
நூ. 431. இருதிசை - பெருந்திசைகளாகிய வடக்கும் தெற்குமே ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடை’ என்பதனை நோக்குக. குணக்கும் குடக்கும் பண்டு கோணத்திசைகளே. கிழக்கு மேற்கு என்பன தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டனவாய்ப் பாட்டுந்தொகையும் கொள்ளாத திசைப் பெயர்களே. வடகுணக்கு, வடகுடக்கு, தென்குணக்கு, தென்குடக்கு என்ற கோணத்திசைப் பெயர்களை நோக்குக. குணவடக்கு, குணதெற்கு என்ற ஆட்சி இன்மையும் ஆராய்ந்து நோக்கத் தக்கது.48 |
|
45. செந்தமிழ்க்கும் இம்மரபு ஒக்கும் என்பது. |
46. கெடாது நிற்றலையும் கருதி இவ்வாறு பொருள் கொள்ளப்பட்டது. |
47. அடைவே எழுதி நோக்கின் விளக்கமாகும். |
48. ‘‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பே ரெல்லை யகத்தவர்’’ (செய்.75) என்பதனான் பெருந்திசை நான்கெனக் கொள்ளப்பட்டது. வழக்கும் எளிமையும் நோக்கிக் கிழக்கு மேற்கு என்னும் பரியாயச் சொற்கள் எடுத்துக்காட்டப் பெற்றன. |