xxxvi |
ஆசிரியர் பாலசுந்தரனாரின் இலக்கணத் தொடர்பான தனிக்கட்டுரைகள் வெளிவரின் இவ்ஐயங்களிற்பல அகலுதற்கு வாய்ப்புண்டு. தொல்காப்பியனார் நும் என்பதனை முன்னிலைப் பன்மை அடிப்படை வடிவமாகவும் நீயிர் என்பதனை அதன்முதல் வேற்றுமைப்பெயராகவும் கொண்ட செய்தி தமிழ்மரபினை ஒட்டி மனங்கொள்ளுமாறில்லை.49 ஆசிரியர் எக்கருத்தான் நும் என்ற ஒரு சொல்லை மாத்திரம் அங்ஙனம் கொண்டார் என்பதனை ஓர்ந்து உணரவும் இக்காலத்துப் போதிய கருவிகள் இல்லை. அவரவர் தத்தம் ஊகங்களை வலியுறுத்தும் நிலையிலேயே அமையும் நிலையில் உள்ளனர். |
இவ்வாசிரியருடைய தொல்காப்பியச்சொற்படலம், பொருட்படலம் ஆகியவற்றின் உரைகள் வெளிவரும் போது இ்வ்வுரை வாயிலாகப் பல அரிய நுண் பொருள்களைக் காணும் வாய்ப்புப் பெற்றமைபோலக் ‘‘கண்டறியாதன கண்டோம்’’ என்று உவகையில் திளைக்கும் வாய்ப்பு ஏற்படும். அவை விரைவில் வெளிவர இறையருள் முன்னிற்பதாகுக. |
இவ்வாசிரியர்பால் பயின்ற மாணாக்கர் பல நூற்றுவர் இருப்பினும் அச்சுப்படியினைத் திருத்திக் கொடுக்கும் நல்லூழ் ஒருவருக்கும் கிட்டாது போயினமை நம் அல்லூழே. ஆகலின் அச்சுப்பிழைகள் மலிந்துள்ளன. அவற்றைத் திருத்திக்கொண்டு இந்நூலை நுணுகிப் பயின்று பயன்பெறுதல் நம் கடமையாகும். |
அரியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால் |
இன்மை அரிதே வெளிறு. |
குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் |
மிகைநாடி மிக்க கொளல். |
குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல் |
கற்றறிந்த மாந்தர் கடன் |
ஆசிரியன் |
தி. வே. கோபாலையன், |
புதுச்சேரி. |
|
49. மூவிடப்பெயர் ஆய்வுரையுள் விளங்கும். |