நூன்மரபு303

அளவு  முதலிய   பெயர்க்குக்  கடிநிலை  இன்று என்றதனான் அவை
பிறபொருட் பெயராய் வரும்வழி இயல்பாக நின்று புணருமென்க.
 

எ. டு:  ஏழ்கலம் (கலம் - கப்பல்); ஏழ்மண்டை (மண்டை - பாத்திரம்);
ஏழ்தொடி (தொடி-ஓர் அணிகலன்) எனவரும்.
 

‘‘கடிநிலையின்றே’’  என்றதனான்    மேல்விதந்து    கூறுவனவல்லாத
பிறபொருட்பெயர்கள்  வருங்கால்  நெடுமுதல்  குறுகி  உகரம்   பெறுதல்
ஈண்டே கொள்ளப்படும்.
 

எ. டு: எழுகடல்,  எழுசிறை,  எழுதிசை, எழுபிறப்பு எனவரும். இவை
இயல்பாகப் புணர்தலே சால்புடைத்தாகும்  என்க.  வல்லெழுத்ததிகாரத்தை
மாற்றியமையான்   இயல்புகணத்தும்  இத்திரிபு  ஏற்புழிக்  கொள்ளப்படும்.
எழுநிலம் (செய்-164) எழுவகை (புறத்-20) எனவரும்.
 

சூ. 390 :

பத்தென் கிளவி ஒற்றிடை கெடுவழி 

நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி  

(95)
 

க-து :

ஏழ்  என்பதன்  முன்வரும்  பத்து  என்னும்  சொல் திரியுமாறு
கூறுகின்றது.
 

பொருள் :ஏழ்  என்பதன்  முன்வரும்   பத்து   என்னும்  சொல்லின்
இடைநின்ற  ஒற்றுக்கெடுமிடத்து  ஆண்டு ஆய்தப்  புள்ளியாகிய  எழுத்து
நிற்றல் வேண்டும்.
 

எ. டு: எழுபஃது  எனவரும். ஒன்று  முதலாய  எண்களின் முன்னர்ப்
பத்து என்னும் சொல்லின் இடை ஒற்றுக்கெட்டு ஆய்தமாதல் குற்றியலுகரப்
புணரியலுள்  விதிப்பார்  எனினும் ஏழ் என்பது குற்றியலுகர ஈறன்மையான்
அவ்விதிகள் இதற்குச் செல்லாமை நோக்கி ஈண்டு விதித்தார் என்க.
 

எழுபத்தொன்று, எழுபத்திமூன்று  என்றாற்போலப் பத்து  என்பது பிற
எண்ணொடு   தொடர்ந்து   வருங்கால்  இடையொற்றுக் கெடாது; தனித்து
வந்துழியே கெடும் என்பதனை உணர்த்த ‘‘ஒற்றிடைகெடுவழி’’ என்றார்.
 

சூ. 391 :

ஆயிரம் வருவழி உகரங் கெடுமே 
(96)
 

க-து :

ஏழு   என்னும்     திரிபுற்றசொல்    ஆயிரம்    வருமிடத்து
இயல்பாகுமென்கின்றது.
 

பொருள் :ஏழு   என   விதியீறாய்    நின்றசொல்லின்முன்  ஆயிரம்
என்னும் எண்ணுப் பெயர்வரின் உகரம் கெடும்.