நூன்மரபு304

எழு  என்பதன்கண்  உகரம்  கெட்ட வழி ‘ழ’கர ஈறு குறிற்கீழ் ஒற்றாக
நிற்றற்கு  ஏலாமையான்  முதல்  நீளும்  என்பது உய்த்துணரப்படுமாதலின்
எடுத்துக் கூறாராயினர் என அறிக.
 

எ. டு:எழு (ஏழ்) + ஆயிரம் - ஏழாயிரம் எனவரும்.
 

சூ. 392 :

நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் 

கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே  

(97)
 

க-து : 

நூறாயிரம்   என்னும்  சொல்  வருமிடத்து ஏழ் என்னும் சொல்
இயல்பாக நின்றுபுணருமென்கின்றது.
 

பொருள்:   ஏழு என்னும் சொல் நூறு என்பதனைத் தொடர்ந்து வரும்
ஆயிரம்  என்னும் தொகைமொழிக்கு   மேற்    பொதுவிதியாகக்   கூறிய
நெடுமுதல்    குறுக்கம்   இல்லை. உகரக்  கேடு  மேலைச்   சூத்திரத்துக்
கூறப்பட்டது.
 

எ. டு:   எழு  +  நூறாயிரம்  =  ஏழ்நூறாயிரம் எனவரும்.   ‘கூறிய’
என்றதனான் சிறுபான்மை எழுநூறாயிரம் எனவருதலும் கொள்க.
 

சூ. 393 :

ஐஅம் பல்என வரூஉம் இறுதி 

அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும் 

(98)
 

க-து :
 

ஒருசார் எண்ணுப் பெயர்க்கு மேலை விதியை எய்துவிக்கின்றது.
 

பொருள்:  (எழு)  ஏழ்  என்னும்  சொல்  ஐ,   அம்,  பல்  என்னும்
இறுதிகளை   உடையவாய்   வரும்   பொருட்  பெயரல்லாத   எண்ணுப்
பெயர்களாகிய தாமரை, வெள்ளம், ஆம்பல்,  நெய்தல்  என்னும் சொற்கள்
வருமிடத்தும் மேற்கூறிய இயல்பொடு நிற்கும்.
 

அஃதாவது  நெடுமுதல்  குறுகாமலும்  உகரம்  பெறாமலும்  இயல்பாக
நிற்கும்.
 

எ. டு: ஏழ்தாமரை, ஏழ் வெள்ளம், ஏழாம்பல், ஏழ்நெய்தல் எனவரும்.
 

விகுதிகளைக்  கொண்டு  பெயர்நிலைக்  கிளவிகளைச்  சுட்டிக்  கூறும்
மரபு    வடமொழிக்கே  உரியதெனக்  கருதற்க. அது தமிழுக்கும் உரியதே
என்பதை    உணர்த்த ‘ஐஅம்   பல் என   வரூஉம்   இறுதி அல்பெயர்’
என்றார்.  எனவரூஉம்  என்றது  இவ்வாறு  வருவன   பிறவும்   கொள்க
என்றவாறு.