பொருள்: நெட்டெழுத்தின் பின் நிற்கும் ளகர ஈற்றுச் சொற்கள் சில இயல்பாக வருவனவும், வேற்றுமைப் புணர்ச்சியல்லாத அல்வழிக்கண் வேற்றுமைப் புணர்ச்சிக்குரிய விதியொடு நிற்றலும் உளவாம்; அவற்றைப் (மரபுணர்ந்து) போற்றிக் கொள்ளுதல் வேண்டும். |
எ. டு: கோள்கடிது; தாள்கடிது, சிறிது, பெரிது என இவை இயல்பாக வந்தன. நாட்கடிது-புட்பறந்தற்றே, உட்பொருள் என வேற்றுமையல்வழித் திரிந்தன. புட்டேம்பப் புயன் மாறி என்பது தகரம் வருதலினால் எய்திய திரிபாகலின் அதனைக் காட்டல் நிரம்பாதென்க. |
இனி வெட்பாலை, கோட்பாடு என்றாற் போல இருமொழி ஒரு சொல்லாய் நிற்பனவற்றையும், நாட்படவரும் என்றாற் போலப் புணர்மொழியாக வருவனவற்றையும் ஓர்ந்தறிதல் வேண்டுமென்பார் ‘போற்றல் வேண்டும்’ என்றார். |
உதளங்காய் எனச் சாரியை பெறுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். சாரியை பெறுதல் “பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப’’ (புண-30) என்னும் சூத்திரத்தான் எய்துமாகலின் ஈண்டு அமைத்தல் வேண்டா என்க. |
சூ. 401 : | தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல |
(106) |
க-து : | ளகர ஈற்றுத் தொழிற்பெயர் புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: ளகார ஈற்றுத் தொழிற்பெயரெல்லாம் இருவழியும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயரியல்பினவாய் உகரம் பெற்று வல்லெழுத்து வரின் மிக்கும் ஞநமவரின் இயல்பாயும் புணரும். |
எ. டு: துள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். துள்ளுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வேற்றுமைக்கண்ணும் ஒட்டிக் கொள்க. |
உரையாசிரியன்மார் கோள் கடிது - கோட்கடிது;வாள்கடிது - வாட்கடிது என உகரம் பெறாது உறழ்ந்து வருவனவும் கொள்க என்பார். கோள் என்பது கொள் என்னும் முதனிலைத் தொழிற் பெயர் திரிந்து பெயர்ப் பொருட்டாய் நிற்கும் சொல்லாகலானும் வாள் என்பது பெயருரிச் சொல்லாக நிற்றலானும் அவர் கருத்துப் பொருந்தாதென்க. |
வாள் என்பது கொல்லுதல் என்னும் பொருள் தரும் தொழிற் பெயர் என்பார் ஒருசாரார். சொல்லுதல் என்னும் பொருள் தரும் |