நூன்மரபு313

மொய்ம்பு    எனவும்   ஆர்ந்து,   சூழ்ந்து   எனவும்  வரும். இவை
மென்றொடர்.  எனவே  சார்பு,  உல்கு, வெய்து,  போழ்து,  தெள்கு  என
இடைத்தொடர் ஓரொற்றாயே வரும் என்பதாயிற்று. வகரம் வல்லொற்றொடு
மயங்காமையின் இடைத்தொடர்  மேற்கூறிய ஐந்துவகையாகவே வரும் என
அறிக.
 

சூ. 408 :

அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 

எல்லா இறுதியும் உகரம் நிலையும்  

(3)
 

க-து :

குற்றியலுகரம்   நால்வகைச்  சொற்கும்  ஈறாகி  இருவழியானும்
புணரும் என்கின்றது.
 

பொருள்:  அல்வழிப்   புணர்ச்சியைக்   கூறுமிடத்தும்,  வேற்றுமைப்
புணர்ச்சியைக் கூறுமிடத்தும் பெயரும் தொழிலுமாக அடங்கிவரும் எல்லாச்
சொற்களினிறுதியும் குற்றியலுகரம் நிலைபெற்றுப் புணரும். நிலையும் என்றது
நின்று புணரும் என்றவாறு.
 

எ. டு:  தேசு, முரசு, உல்கு, க ஃசு, கச்சு, நெஞ்சு என நிறுத்தி இனிது,
இனிமை   எனக்கூட்டி   இருவழியும்    பெயராக   நின்று புணருமாறும்,
கூறென்றான், பருகென்றான், நோக்கென்றான், அஃகென்றான், நல்கென்றான்,
உண்டென்றான்  எனத்  தொழிற்  சொல்லாக  நின்று புணருமாறும் கண்டு
கொள்க.  ஏனைக்  கணங்களையும் இவ்வாறே கொணர்ந்து  கூட்டிக் கண்டு
கொள்க.
 

சாத்தா!  கூறு, நோக்கு  என முன்னிலை  ஏவலாக  வருதற்கண்  கூறு,
நோக்கு என்பவை குற்றுகரமாகா. ஆண்டு  அவை  முற்றுகரங்கள் என்பது
தொகைமரபினுள் கூறப்பட்டது.
 

இனி,   இவற்றைத்   தனிமொழியாகக்   கூறுதற்கண்   முற்றுகரமாயின்
இதழ்குவித்தும்  குற்றுகரமாயின்   இதழ்   குவியாதும்   கூறிக்   கொள்க.
வரிவடிவின்கண்   புள்ளியிட்டுக்  குற்றியலுகரத்தை  வேறுபடுத்திக்  கண்டு
கொள்க.  வரிவடிவ  அடையாளம் இன்றியமையாததென்பதை   உணராமல்
இடைக்காலத்தார்         நெகிழவிட்டமையின்     உரையாசிரியன்மாரும்
ஆய்வாளரும்   குழப்பத்திற்காளாயினர்.     ஒருசாரார்     வரிவடிவைப்
பிறைக்கோட்டினுள் எழுதிக்காட்டுவர்.
 

இனி,   இந்நூற்பாவின்  கருத்துப்  புணரியலுள்  ‘‘அறுநான்  கீற்றொடு
நெறிநின் றியலும்’’  (புண-1) என்னும் சூத்திரத்துள் குற்றியலுகரமும் சேர்ந்து
எண்ணப்பெற்றமையின் “வேற்றுமை