இம் மொழியியல் நுண்மையைத் தேறாத பின்னூலோர் குற்றியலுகரமே இகரமாகத் திரியுமென்ப. அதன் திரிபு எனின் அது குற்றியலுகரத்தின் புணர்ச்சி விகாரமாவதல்லது பிறிதொரு சார்பெழுத்தாக எண்ணுதற் கேலாமையை அவர் எண்ணிலர். இனி, உரையாளர் யாவரும் இச்சூத்திரத்திற்குக் கூறிய உரையும் விளக்கமும் ஒவ்வாமையைச் சார்பெழுத்து ஆய்வுக் கட்டுரையிற் கண்டுகொள்க. |
மொழிமரபினுள் “புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே” என எதிர்மறை உம்மை கொடுத்துவிட்டமையின் ஈண்டு வாளாகூறினார். அதனான் குறுகாதும் நிற்கும் என்பது பெறப்படும். குறுகுமிடமும் குறுகா இடமும் பொருள் நோக்கி உணர்தல் வேண்டுமென்பது அச்சூத்திர உரையுள் விளக்கப்பட்டது. |
எ.டு: ஆடு + யாது = ஆடியாது; கவடு + யாது = கவடியாது; தொண்டு + யாது = தொண்டியாது எனவருபவை குறுகும். தெள்கு + யாது = தெள்கியாது; வரகு + யாது = வரகியாது என வருபவை குறுகா. |
இச்சூத்திரம் “வல்லொற்றுத் தொடர்மொழி” என்னும் சூத்திரத்திற்கு முன்னர் இருத்தல் வேண்டும். அதுவே மொழிமரபினுள் நிறுத்த முறைக்கு ஒத்ததாகும். |
சூ. 411 : | ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் |
| வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத் |
| தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி |
(6) |
க-து : | நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் எய்தும் முறைமை கூறுகின்றது. |
பொருள்: ஈரெழுத்தொரு மொழி, உயிர்த்தொடர் மொழிக் குற்றுகரங்கள் வேற்றுமைப்புணர்ச்சியாயின் குற்றுகரம் ஊர்ந்து நின்ற வல்லெழுத்தே இனமாக மிக்கு இரட்டித்து நிற்க வருமொழி வல்லெழுத்து மிக்குப் புணரும். |
வல்லெழுத்துமிகும். எனவே ஏனைக் கணங்கள்வரின் இரட்டித்து நிற்குமளவில் இயல்பாகப் புணரும் என்பது போதரும். |
எ.டு: ஆறு + கரை = ஆற்றுக்கரை, செலவு, தண்ணீர், புறம் எனவும் கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில், செறிவு, திரி, புறம் எனவும் இரட்டித்து வல்லெழுத்து மிக்கன. யாடு + ஞாற்சி = |