யாட்டுஞாற்சி, நிணம், மணி, வால் என ஏனைக்கணங்கள் இயல்பாயின. முயிறு, குறடு முதலியவற்றொடும் இவ்வாறே ஒட்டிக் கொள்க. |
இரட்டுதல் பெரும்பான்மையும், றகரமும் டகரமுமாம். சிறுபான்மை எருத்துக்கால்-வெருக்குக்கண் எனத் தகரமும் ககரமுமாம். “தோற்றம்” என்றதனான் களிற்றியானை, கரட்டுக்கானம், வெளிற்றுப்பனை என இருபெயரொட்டு அல்வழிக்கண் இரட்டுதல் கொள்க. |
சூ. 412 : | ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே |
| அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகுதி |
(7) |
க-து : | மேற்கூறிய இருவகை மொழிகட்கும் பிறிதொருவிதி கூறுகின்றது. |
பொருள் : மேற்கூறிய இருவகை மொழிகளுள் இடையே இன ஒற்று மிகாத மொழிகளும் உள. அவ்வகை மொழிகளிடத்து வருமொழி வல்லெழுத்து மிகுதல் இல்லை. |
எ. டு: நாகுகால், செவி, தலை, புறம் எனவும்; வரகுகதிர், சினை, தாள், பதர் எனவும் வரும். |
சூ. 413 : | இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் |
| நடையா யியல என்மனார் புலவர் |
(8) |
க-து : | இடைத்தொடர், ஆய்தத் தொடர்கள் இயல்பாகப் புணருமென்கின்றது. |
பொருள் : இடைத்தொடர் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரங்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்தொடு புணருமிடத்து மேற்கூறிய அவ்வியல்பினவாம் எனக் கூறுவர் புலவர். என்றது; இயல்பாகப் புணருமென்றவாறு. |
எ. டு: தெள்குகால், சினை, தலை, புறம் எனவும் எஃகு, கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். |
சூ. 414 : | வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் |
| வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே |
| மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் |
| வல்லொற் றிறுதி கிளையொற் றாகும் |
(9) |
க-து : | வன்றொடரும் மென்றொடரும் புணருமாறு கூறுகின்றது. |