நூன்மரபு319

எ. டு: தேக்கங்கோடு-வேப்பங்காய்,  செதிள்,  தோல்,  பூ   எனவரும்.
தன்னினமுடித்தல் என்னும் உத்தியான் மரத்திற்கு இனமாகிய புல்லும், பூடும்
ஆகியவற்றிற்கும் இவ்விதி கொள்க.
 

எ. டு:  கமுகங்காய், சீழ்கம்புல், கம்பந்தாள்,  அடும்பங்கொடி  எனவும்
நாற்றங்கால், பயிற்றங்காய் எனவும்வரும்.
 

இந்நூற்பா மரமல்லனவற்றை   மாறுகொளக்  கூறல்   எனத்   தழீஇக்
கொண்ட சிதைவென்பார் பேராசிரியர்.
 

சூ. 416 :
 

மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே
 
(11)
 

க-து :

மரப்பெயர்களுள்   சிலவற்றிற்கு   எய்தியது ஒரு    மருங்கு
விலக்குகின்றது.
 

பொருள் : மென்றொடர்            மொழியுள்    கிளையொற்றாகத் திரியுமென்றவற்றுள்     அங்ஙனம்   திரியாமல்    அம்முச்சாரியையொடு
வரும் மரப்பெயர்களும் உளவாம்.
 

எ. டு: குருந்தங்கோடு; புன்கங்காய்,  செதிள், தோல்,  பூ   எனவரும்.
உம்மையான்      வல்லெழுத்தாகத்    திரிந்து   சாரியை   பெறுவனவே பெரும்பான்மை என்க. எ.டு : வேப்பங்காய்,  கடப்பங்கோடு    எனவரும்.
இன்னும் அதனானே மரமல்லாத புல்லும்   தெங்கங்காய்,    கருப்பஞ்சாறு
எனவருதலும் கொள்க.
 

சூ. 417 : 

ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் 

அம் இடை வரற்கும் உரியவை யுளவே 

அம்மர பொழுகும் மொழிவயி னான  

(12)
 

க-து : 

 

ஒருசார் ஈரெழுத்து      மொழியும்    வன்றொடர்மொழியும்
அம்முச்சாரியை பெறும் என்கின்றது.
 

பொருள் : நெடிற்றொடர்     மொழி,   வன்றொடர்    மொழிகளுள்
அம்முச்சாரியை இடையே வருதற்கு உரியவையும்  உள. அங்ஙனம் வருதல்
அம்மரபினான் நடைபெறும் மொழிகளிடத்தேயாம். உம்மை எதிர்மறை.
 

எ. டு:  ஏறங்கோள், சூதம்போர் எனவும் வட்டம்போர் எனவும் வரும்.
நாகுகால், கொக்குக்கால் இவை   போல்வன   அம்முப்பெறாதன. “அம்மர
பொழுகும் மொழிவயி னான” என்றதனான்   சிறுபான்மை    விளக்கத்துக்
கொண்டான் என   அத்துச்சாரியை    பெறுதலும்   கொள்க    என்றார்
உரையாசிரியர்.
 

சூ. 418 :

ஒற்றுநிலை திரியாது அக்கொடும் வரூஉம் 

அக்கிளை மொழியும் உளவென மொழிப  

(13)
 

க-து :

மென்றொடர்மொழி சிலவற்றிற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.