நூன்மரபு321

பொருள் :மூன்றீற்றுக்   குற்றியலுகர   எண்ணுப்  பெயர்ச்   சொற்கள
பொருட்புணர்ச்சிக்கண்   உருபுபுணர்ச்சிக்கு   ஓதியாங்கு     அன்சாரியை
பெற்று நிற்கும்.
 

எ. டு: ஆறன்காயம், நூறன்காயம்,    எட்டன்காயம்,    ஒன்றன்காயம்,
ஐந்தன்காயம் எனவரும். சுக்கு, தோரை,   பயறு,   ஞாண்,   நூல்,  மணி,
வட்டு, அடை, ஆடை என ஏனை    எழுத்தொடும்   கூட்டிக்   கொள்க.
ஆறன்காயம் = ஆறனாற் கொண்ட காயம் என வேற்றுமைப்   பொருள்பட
விரிக்க.
 

சூ. 420 :
 

வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்
 
(15)
 

க-து :

மென்றொடர்மொழியுள் இரண்டற்கு வேறு சாரியை ஓதுகின்றது.
 

பொருள் :வண்டு-பெண்டு  என்னும்    சொற்கள்   இன்சாரியையொடு
பொருந்திவரும்.
 

எ. டு:வண்டின்கால், பெண்டின்கால் -   சிறை,  செவி,  தலை,  புறம்
எனவரும். ஏனைக்கணங்களுள் ஏற்பன கூட்டிக் கொள்க.
 

சூ. 421 :
 

பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்
 
(16)
 

க-து :

பெண்டென்னும்  சொற்கு     எய்தியதன்மேற்     சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள்:    மேற்கூறியவற்றுள்         பெண்டென்னும்    சொற்கு
இன்சாரியையேயன்றி அன்சாரியை வரினும் நீக்கார் ஆசிரியர்.
 

எ. டு: பெண்டன்கை,  செவி,   தலை,   புறம்   எனவரும்.   ஏனைக்
கணங்களுள் ஒப்பன கூட்டிக் கொள்க.
 

சூ. 422 : 

யாதென் இறுதியும் சுட்டு முதலாகிய

ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்  
(17)
 

க-து :
 

ஒருசார் வினாப்     பெயர்    சுட்டுப்பெயர்கட்காவதொருவிதி
கூறுகின்றது.
 

பொருள் : யாது      என்னும்      நெடிற்றொடர்     மொழியாகிய
வினாப்பெயரிறுதியும், சுட்டுமுதலாகிய  ஆய்தத்      தொடர்மொழியாகிய
(சுட்டுப்) பெயர்களின் இறுதியும், உருபுபுணர்ச்சிக்கு  ஓதிய  இயல்பினவாய்
நிலைபெறும்.
 

அஃதாவது;  இவை அன்சாரியை    பெறும்.   ஆய்தம்    தொடர்ந்த
சுட்டுப்பெயரிறுதி சாரியை பெற்றபின் ஆய்தம்கெடும் என்றவாறு.