xxxviii |
முடியுங்கள் எழுதியவரை அச்சிடக்கொடுத்துவிடுங்கள் அச்சிடுவதற் குரிய செலவு சால்பகத்தின் பொறுப்பாகட்டும், என மனமாரக்கூறி ஊக்கி இவ்வுரை வருதலிற்பேரார்வங் கொண்டு தனது அகங்கனிந்த வாழ்த்துரையையும் நல்கி என்பாற்பேரன்பு காட்டிவரும் உடன்பிறப்பன்ன பெருந்தகையாளர், தஞ்சை சால்பகத்தை நிறுவிப் புரந்துவரும் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் அறநிலைய ஆணையருமான திரு உலக. சுப்பிரமணியனார் அவர்கட்கும் என் நெஞ்சு நிறைந்த நன்றியைச் செலுத்துகிறேன். |
இதனை வணிக வெளியீட்டு நிலையங்கள் மூலமாகவோ பல்கலைக்கழக முதலாய நிறுவனங்கள் வாயிலாகவோ வெளியிடுவதினும் உங்கள் பொறுப்பிலேயே பதிப்பித்து வெளியிடுதல் நலம், அதற்காகும் உதவியையான் செய்கிறேன் எனக் கருத்தேற்றங்கூறி அக்கடமையையான் ஏற்றமைக்கு மகிழ்ந்து அரியதொரு அணிந்துரையும் வழங்கி என்பால் அன்பு காட்டி வரும் மொழியியல் வல்லுநர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ச. அகத்தியலிங்கனார் அவர்கட்கு எனது பணிவார்ந்த நன்றியைச்செலுத்துகிறேன். |
காணும் பொழுதெல்லாம் இவ்வுரை பற்றி உசாவி புதிய சிந்தனைகள் வரவேற்கத்தக்கவை சிலகுறைகள் நேரினும் பழுதொன்றுமில்லை. பொருந்துவன சிலவாயினும் அவை ஆக்கந்தருவனவேயாகும் விரைவாக வெளிவர ஆவன செய்க என உளமார ஊக்கியும் எழுத்ததிகார உரையை முழுமையாக நோக்கி நல்லறிவாளர் சிந்தனையைக் கிளரத்தக்கதோர் அரிய ஆய்வு அறிமுக உரையை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ள கெழுதகை நண்பர் பன்மொழிவித்தகர் இலக்கணச்செம்மல் பேராசிரியர் தி. வே. கோபாலையர் அவர்கட்கு எனது உளங்கனிந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். |
இவ்வுரை வெளிவரப் பல்காலுந்தூண்டி என்பால் பேரன்பு கொண்டு உரைபெறு வாழ்த்து வழங்கியுள்ள மதிப்பிற்குரிய பேராசிரியர் மேஜர் அ. கிருட்டிணமூர்த்தி அவர்கட்கு என் மனமார்ந்த நன்றியைச்செலுத்துகிறேன். |
இவ்வுரையின் அறிவியல் நோக்கினை உணர்ந்து பல்கால் என்னொடு உரையாடி மகிழ்ந்து இந்நூல் வெளிவரப் பல்லாற்றானும் உதவி வரும் அரும் பெறல் நண்பர், தனது பேச்சாலும் எழுத்தாலும் தமிழ் மொழிக்கு அரிய தொண்டாற்றி |