நூன்மரபு322

எ. டு: யாதன்கோடு; அதன்கோடு, இதன்கோடு,  உதன்கோடு,  செவி,
தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்களொடும்  ஒட்டிக்கொள்க.  அஃது +
அன் + கோடு = அதன்கோடு. சாரியை ஏற்றபின் ஆய்தம் கெட்டது.
 

சூ. 423 :

முன்னுயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி 

மன்னல் வேண்டும் அல்வழி யான  

(18)
 

க-து :
 

ஆய்தத்      தொடர்ச்   சுட்டுப்பெயர்   அல்வழிக்கண்
உயிர்முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :ஆய்தத்தொடர்     மொழியாகிய   சுட்டுப்    பெயர்கள்,
அல்வழிக்கண் உயிர்முதன்மொழி வந்து புணருமிடத்துச் சாரியை வருங்கால்
கெடுமென்ற ஆய்த எழுத்துக் கெடாது நிலைபெறல் வேண்டும்.
 

எ. டு: அஃது, இஃது, உஃது என நிறுத்தி அணி, ஆடை, இலை, ஈயல்,
உரல், ஊர்தி, எழு, ஏனை,    ஐயம்,   ஒழுக்கம்,    ஓங்கல்,   ஒளவியம் என்பவற்றைக் கூட்டி அஃதணி, அஃதாடை என முறையே வருமாறு கண்டு
கொள்க.
 

சூ. 424 :
 

ஏனைமுன் வரினே தானிலை யின்றே
 
(19)
 

க-து :
 

 

மேற்கூறிய   சுட்டுப்பெயர்கள்   ஏனைக்கணத்தொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :   ஆய்தத்       தொடர்மொழிச்       சுட்டுப்பெயர்கள்
உயிர்க்கணமில்லாத ஏனைக்கணம் வந்துபுணரின்  மன்னல்  வேண்டுமென்ற
ஆய்தப்புள்ளி நிலைத்தல் இன்று.
 

எ.டு :அஃது + கடிது = அதுகடிது, சிறிது,   தீது, பெரிது,   ஞான்றது,
நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும்.
 

சூ. 425 :

அல்லது கிளப்பின் எல்லா மொழியும் 

 

சொல்லிய பண்பின் இயற்கை யாகும் 
(20)
 

க-து :

வன்றொடர் அல்லாத   மொழிகள்   அல்வழிக்கண் புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் :வன்றொடர் அல்லாத  ஏனை   ஐந்தீற்றுக்    குற்றியலுகர
மொழிகள் யாவும்    அல்வழியாற்    புணருமிடத்து   முதனூலாசிரியராற்
சொல்லப்பட்ட முறைமையானே இயல்பாகப் புணரும்.