நூன்மரபு323

“வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே” என  மேற்கூறுதலின் எல்லா மொழியும் என்றது அஃதொழிந்த ஏனைய ஐந்து மெனக் கொள்க.
 

எ. டு:நாகு-வரகு-தெள்கு - எஃகு-விலங்கு     எனநிறுத்திக்   கடிது,
சிறிது, தீது,  பெரிது     எனக்கூட்டி     இயல்பாமாறு    கண்டுகொள்க.
ஏனைக்கணங்கள் இயல்பாமாறு தொகைமரபினுள் (சூ. 2) கூறப்பட்டது.
 

“சொல்லிய பண்பின்” என்றதனான், பெயர்ச்சொற்களேயன்றி   ஏனைச்
சொற்களுள் முற்றுவினைக்கண்; கிடந்தது குதிரை; கரியது குதிரை, செந்நாய்,
தகர், புல்வாய் எனவும், வினை எச்சத்தின்கண் இருந்து கொண்டான்; கண்டு
கொண்டான், சென்றான், தந்தான்,    போயினான்   எனவும்,   ஏழாவதன்
பொருட்டாய்    வரும்    இடப்பெயர்,   காலப்பெயர்களிடத்து,   அங்கு கொண்டான், இங்கு கொண்டான்; முந்து கொண்டான்,  பண்டுகொண்டான்,
சென்றான், தந்தான், போயினான் எனவும் உரிச்சொற்கள்  பழுதுபயமின்றே,
முழுது கற்றான், வறிது சிறிதாகும்   எனவும்   இயல்பாகப்   புணருமெனக் கொள்க.
 

சூ. 426:
 

வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே
 
(21)
 

க-து :
 

வன்றொடர் மொழி அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் : வன்றொடர்க் குற்றியலுகர ஈறு அல்வழிக்கண் வல்லெழுத்து
வருவழி மிக்குப் புணரும். அல்வழி என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ. டு:கொக்குக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.  இனிக்   கற்றுக்
கொண்டான்,  உய்துச்   சென்றான்  என  வினையெச்சத்தின்   கண்ணும்,
மற்றுச்சொல்நோக்காது என  இடைச்சொற்கண்ணும்  சிவப்புக்காந்தள்  என
உரிச்சொற்கண்ணும்     மிக்கது.   சிவப்பாகிய காந்தள்  எனப்  பண்புருபு
விரித்துக் கொள்க.
 

சூ. 427 :

சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் 

யாவினா முதலிய மென்றொடர் மொழியும் 

ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை 

(22)
 

க-து :

மென்றொடர்    மொழிச் சுட்டு,  வினாக்களின் ஈறு புணருமாறு
கூறுகின்றது.