இத்தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை உருப்பெற - அச்சேற-பல்வகையான் துணைபுரிந்துள்ள பெருமக்களையும் அவர்தம் உதவிகளையும் உரை வரலாற்றில் விரிவாக எழுதவுள்ளேனாதலின் அவருள் புலவர் வி. அ. அரங்கசாமி, பி. விருத்தாசலம் எம். ஏ., ந. இராமநாதன் எம்.ஏ., முனைவர் தமிழண்ணல், முனைவர் நா. பாலுசாமி, க. வெள்ளைவாரணனார், ச. இராமநாதன் (க.த.ச) முனைவர் க. பாலசுப்பிரமணியன், குன்றக்குடி அடிகளார், முனைவர் மு. தமிழ்க்குடிமகன், ஒளவை து. நடராசன், முனைவர் சோ. ந.கந்தசாமி, முனைவர் செ. வை. சண்முகம், க. சிவகாமி, முனைவர் கோ. தெய்வநாயகம், முனைவர் வே. காத்தையன், முனைவர் அ. தட்சணாமூர்த்தி, குரு. கோவிந்தராசன், மா.ரா. அரசு, க. கலியபெருமாள், ம.ஏசுதாசன், முனைவர் பெ. மாதையன், முனைவர் சித்திரபுத்திர பிள்ளை, முனைவர் இரா. இளையநம்பி, முனைவர் வி. ஐ. சுப்பிரமணியம் முதலிய பெமக்களை நன்றியோடு நினைக்கிறேன். இதனை முட்டுப்பாடின்றி முற்றுவித்த இறைவன் திருவடிகளைப் போற்றுகின்றேன் நன்றி. |