அடைகள் காணப்படுகின்றன. ‘‘செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு’’ என்பது பாயிரம். அடையாவது (விசேடணம்) பொருளின் பண்பு முதலாயவற்றை விளக்குதலாம். செந்தமிழ் என்பது இலக்கண ஆசிரியர் தம் வழக்கு. தண்டமிழ், பைந்தமிழ், நறுந்தமிழ், முத்தமிழ், கன்னித்தமிழ் முதலாயவை இலக்கிய ஆசிரியர் தம் வழக்கு. | இவ் அடைமொழிகளை ஊன்றி நோக்கின், அவை மொழியின் பண்பியல்புகளைமட்டுமன்றித், தோன்றி வளர்ந்துவந்த வரலாற்று நிலைகளையும் சுட்டி நிற்றலைக் காணலாம். | பேச்சுவழக்கினின்று தமிழ் எழுத்துவடிவம் பெற்று, இலக்கிய நிலை எய்தியகாலை, இலக்கணம் வகுத்த பேரறிஞர்கள் சொற்களையும் சொற்றொடர்களையும் செப்பஞ்செய்து அமைத்திருத்தல் வேண்டும் என்பது ‘செந்’தமிழ் என்னும் அடையினாற் புலனாகும். அங்ஙனம் செயற்கையாகச் செம்மையுறாமல் இயற்கையாகவே வழங்கிய நிலையை நறுந்தமிழ் என்னும் அடை சுட்டுகின்றது. அவ்வகையிற் கிளைத்துப் பெருகிய நிலையை வண்டமிழ் என்னும் அடைகாட்டுகின்றது. அங்ஙனம் நெறிப்படுத்திய வழக்கினையே மரபு என்னும் குறியீடு புலப்படுத்துகின்றது. | மரபு என்பதற்குப் பொருள், வரலாற்று முறைமையான் வரும் வழக்கு என்பதாகும். ‘மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும்’ ஆதலின், மரபு பிறழக் கூடாதென்பதனைத் ‘தம்மரபினவே’ (கிளவி-11) என்பதனான் அறியலாம். சிறுபான்மை பிறழும் மரபுகளைப் புறனடையான் அடக்கிக் கொள்வதும் மரபேயாகும். | தமிழ்மொழிக்குரிய அடிப்படைமரபுகளை மொழியியல் நோக்கிற் சிறிது காண்போம். தமிழ்மொழிச்சொற்களைத் தனியாகவும் தொடராகவும் பேசுங்கால், எழும் ஒலிக்கூறுகள் தொல்காப்பியத்தின் அடிப்படையில் நோக்கின் தொள்ளாயிரத்து ஐம்பத்தேழாக அமைவதைக் காணலாம். அவை வருமாறு. | உயிரெழுத்தொலிகள் | ... | 12 | அளபெடை-3,4 மாத்திரை-7,7 | ... | 14 | ஐகாரப் போலி (அஇ - அய்) | ... | 2 | ஒளகாரப் போலி (அஉ) | ... | 1 | புள்ளி மெய்களுள் வல்லெழுத்து | ... | 6 | ’’ மெல்லெழுத்து | ... | 6 | ’’ இடையெழுத்து | ... | 6 |
|
|