vii
 

போது  தமிழின்  தனித்  தன்மையும்,  சிறப்பும்,  தமிழுக்கே  உரிய  சில மரபுகளும்  கோட்பாடுகளும்   அறிவியல்    அடிப்படையில்    விளக்கப்
பட்டிருப்பதை   அறிந்தேன்.   ஆராய்ச்சியாளர்கட்குப்   பல  நுட்பமான
செய்திகள் விளங்குமென்று நினைக்கிறேன்.
 

பெரும்    புலமையினாலும்     ஆராய்ச்சித்    திறனாலும்    சிறந்த தமிழறிஞர்களுள்    ஒருவராக    விளங்கும்    பாவலரேறு    அவர்கள்
கல்லூரியிலிருந்து  பல்லாண்டுகள்  பாடஞ்சொன்ன அனுபவத்தாலும்  சீரிய உழைப்பினாலும்   தமிழ்மொழிக்கும்   இலக்கணத்திற்கும்    பெரியதொரு தொண்டு செய்திருக்கிறார்கள்.  அவர்களின்  அரிய  பணியை  அன்போடு
பாராட்டுகிறேன். மேலும்  அவர் பல  ஆராய்ச்சி  நூல்களைப்  படைத்துத் தமிழின்   வளத்தையும்   ஆற்றலையும்   உலகறியச்    செய்யவேண்டும்.
அப்பணிகள் இனிது நடைபெற எல்லாநலனும் வளனும் பெற்றுப் பல்லாண்டு
பல்லாண்டு வாழ இறைவனை வேண்டி உளமுவந்து வாழ்த்துகிறேன். வாழ்க!
 

அன்பன்     

யு. சுப்ரமணியன்
 

உரைபெறு வாழ்த்து
 

பேராசிரியர் மேஜர், 

அ. கிருட்டிணமூர்த்தி,எம். ஏ. பி.எல்.,

(முன்னாள் அரசினர் கலைக்கல்லூரி முதல்வர்)
 

பேராசிரியர்     பாலசுந்தரனார்      தொல்காப்பியத்தின்     மூன்று
அதிகாரங்கட்கும் தாமே புதிய உரை வகுத்து முதற்கண் இவ்  எழுத்ததிகார
ஆராய்ச்சிக்   காண்டிகையுரையை  வெளியிட்  டிருக்கிறார்கள்.  கடந்த 30
ஆண்டுகட்கு   மேலாகப்  பல்லாயிரக்  கணக்கான செய்யுட்கள்  யாத்தும்
இலக்கண   உரைகளை  நெடிது  ஆராய்ந்தும்  தமிழ்  விளக்கமாகப்  பல
கட்டுரைகள் வரைந்தும் பெரும்பணி புரிந்து வருபவர் இவர்.
 

கரந்தைப்  புலவர்  கல்லூரியில்  நெடுங்காலம்  பேராசிரியராகப்  பணி புரிந்து  ஓய்வு  பெற்றுத்  தம்  ஓய்வுக்  காலத்தில்  தொல்காப்பியத்திற்கு
இப்புதிய உரையை வகுத்து அந்நூலுக்கு