ix |
ஆண்டுகட்குப் பின் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வரைந்து தந்தவராக இவர் திகழ்கின்றார். இவருடன் தொல்காப்பிய உரையாசிரியர்கள் இனி எழுவராகின்றனர். |
பேராசிரியர் பாலசுந்தரனாரின் உரைமுறை ஆசிரியர் சங்கர நமச்சிவாயர் முறையொடு ஒத்து நடக்கிறது என்பது என் கருத்து. ஆயிரம் ஆண்டுகட்குப் பின் தொல்காப்பியம் முழுமைக்குமாகத் தோன்றி முன்னைய சான்றோர் உரைகளோடு ஒப்ப அமைந்து என் தலைமுறையில் இவ்வுரை அரங்கேறுவதை என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதிக் கண்களிப்பக் காணுகின்றேன். |
உரையியல்பு பற்றிச் சில குறிப்புகள்:- |
(1) தொல்காப்பிய எழுத்தியற் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் எழுத்திலக்கணம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளைச் சுருக்கமாக, இவ்வுரைக்கு ஒரு பாயிரம்போல 19 பக்கங்களில் சுட்டிக்காட்டியிருப்பது நூலைக்கற்கும் மாணாக்கர்க்கும் ஆய்வாளர்க்கும் ஒரு கைவிளக்குப் போல அமைந்துள்ளது. இவ்வாறே புணரியலுரையுள் வேற்றுமை அல்வழி பற்றிய விளக்கமும் சிறப்பாக உள்ளது. |
(2) ஒவ்வொரு நூற்பாவிற்கும் முதலில் கருத்துரையும் அடுத்துப் பொழிப்புரையும், பின்னர் மேற்கோளும், விளக்கம் வேண்டின் விளக்கமும், இன்றியமையாத விடத்துச் சில ஆய்வுக் குறிப்புக்களும், ஓரிடத்திற்காணும் இலக்கணக்குறிப்பு நூலின் பிறிதோரிடத்தில் தொடர்பு கொண்டிருந்தால் அத்தொடர்பினை மாட்டேற்றிக்கூறும் ஆய்வுரையும், அன்னபிறவுமாக அமைதியுற்றுச் சிறக்கிறது. ஆய்வுக்குறிப்புக்கள் பல இருத்தலின் இஃதோர் ஆராய்ச்சிக்காண்டிகையுரையாகிறது. |
(3) இடைக்காலத்திலும் அண்மையிலும் தமிழ் நூல்கட்கெல்லாம் வடமொழி மரபை ஆதாரமாகக் காட்டுவதும் அல்லது வடநூல் மரபோடு தமிழ் மரபைச் சார்த்திக் கூறுவதுமாகக் காலங்கள்தோறும் புலவர்களிடையே ஒரு மாயை நிலவி வந்தது. அம்மாயை தொல்காப்பியத்திற் படிதல் ஆகாது எனக் கருதிய ஆசிரியர் தொல்காப்பியத்துட் கூறப்பெறும் இலக்கணம் யாவும் தமிழ் மரபிற்கே உரியவை என்பது தோன்ற ‘நூலினை நூன் மரபு என்று தொடங்கி இறுதியில் மரபியல் என முடித்துக் காட்டினார் ஆசிரியர்’ எனக் கூறி அம்மாயையை விலக்கியுள்ளார். (பக்-5) சுருக்கமாகத் ‘தமிழுக்கு மரபு எது? அதுவே இந்நூலிற் |