x |
கூறப்பெற்றுள்ளது. பிற மரபன்று. என்பது அதன் குறிப்பாகும். இவ்வாறு சுட்டியுணர்த்தியது பாராட்டற்குரியது. |
(4) பாயிரம் என்பதன் பொருளை விளக்கு முகத்தான் பஹிர் என்னும் வடசொல்லின் திரிபென்பார் கூற்றை மறுத்துள்ளார். நெடிய ஆய்வுகள் பெருகிச் சிறந்துள்ள இவ்வுரையுள் இதுபோன்ற சில்லைச்சிறு செய்திகளை எடுத்துக் கூறி விளக்கி - மறுப்பது - வேண்டா எனத் தோன்றுகின்றது. அஃதாவது இவை போன்றவை புறக்கணிக்கத்தக்கவை என்பது என் கருத்து. |
(5) ‘மகரத் தொடர்மொழி (சூ. 82, பக். 128) என்னும் நூற்பாவில் னகரம் மகரமாக மயங்காத சொற்கள் ஒன்பது என்னும் ஆசிரியர் அதனை விளக்கிக் கூறவில்லை. இதுபோன்ற இடங்கள் சிலவுள, உரையாசிரியர் அவற்றைச் சுட்டி விளக்கி இருப்பின் ஆய்வோர் சிந்தையை மேலும் ஈர்க்க உதவும். |
(6) இப்பதிப்பில் ஏராளமான அச்சுப்பிழைகள் உள. இங்ஙனம் நேர்ந்தமைக்கு ஆசிரியர் முழுக்காரணமாகார். அவர் சக்திக்கு மீறியதாக நிகழ்ந்ததாதல் வேண்டும். பயில்வோர் அப்பிழைகளைத் திருத்திக் கொண்டு படிப்பது நலமாகும். |
(7) இவ்வுரையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. ஓரளவு கற்ற மாணாக்கரும் இந்நூற்பொருளை அறிந்துணர உதவவேண்டுமென்பது. பழைய உரைகள் மாணாக்கர்க்குக் கடுமையாக இருத்தலின், எளிமை வேண்டப்படுகிறது. இப்புத்துரை மேலும் எளிமையாகவும் விளக்கமாகவும் அமைந்திருக்கலாம். எனினும் ஒவ்வோராசிரியர்க்கும் கைவந்த கட்டுரை நீர்மை அவரவர்க்கே உரியது என ஓர்ந்து இருந்தவாறே ஏற்பது சால்பாகும். |
(8) உயிரிறுசொல் முன்’’ (பக். 145) என்னும் நூற்பாவில் நிறுத்தசொல் குறித்துவருகிளவி என்னும் குறியீடுகளின் பொருண்மையை நுண்மையாகக் காட்டியுள்ளதிறம் போற்றத்தக்கது. நூல் முழுதும் இதுபோன்ற இடங்கள் அடுக்கடுக்காக நிறைந்திருக்கின்றன. |
(9) நூன்மரபில் ‘‘எகர ஒகரத் தியற்கையும் அற்றே’’ (பக்.83) என்னும் மரபானபாடத்தைவிட்டு ‘‘இகர உகரத் தியற்கையு மற்றே’’ எனப்பாடங்கொண்டு, காரணகாரியங்களோடு விளங்கியுள்ள உரை ஏற்கத்தக்கதாகத் தோன்றினும் மேலும் ஆராயத்தக்கதாகும். 2800 ஆண்டுகட்குமேலாக வந்த சான்றோரும் |