xi |
பிறரும் நூறு தலைமுறைகட்குமேல் வழங்கியும் தொல்காப்பியத்தில் நேர்ந்த பாடபேதங்கள் மிகக்குறைவு. இருப்பினும் இருப்பவற்றை நூலோர் கூடி ஆராய்ந்து சீர்செய்தல் கடன். |
(10) கூறியுள்ள உரைக்கு மேலும் விளக்கம் வேண்டின் ‘‘எனது சார்பெழுத்து ஆய்வுக்கட்டுரையுட் கண்டுகொள்க’’ எனப்பலக் கட்டுரைகளைக் குறிப்பிடுகின்றார். அவற்றை விரைவாக வெளியிடுதல் பயில்வோர்க்கு நலமாகும். |
(11) ‘‘அத்தொடுசிவணும்’’ என்னும் நூற்பா உரையுள் (பக். 271) ஆயிரத்துக்குறை என்பதை இலேசினான் முடித்த நச்சினார்க்கினியர் உரையையும் இலமென் கிளவிக்கு (பக். 269) என்னும் நூற்பாவில் இலம்படுபுலவர் என்னும் தொடருக்குப்பழைய உரைகாரர்களின் முடிவு பற்றியும் இவ்வுரையாசிரியர் சுட்டும் நுண்மைகள் நினைந்து வியக்கத்தக்கன. இவைபோல்வன பலவுள. அஃதாவது வியக்கத்தக்கன, வியந்து ஏற்கத்தக்கன. வியந்து ஆராயத்தக்கன எனப் பல நுண்மைகள் நூல்முழுதும் பரவிக்கிடக்கின்றன. |
(12) உயிர் மயங்கியலுள் ‘வாழிய என்னும் செய்கென்கிளவி’ எனச் சிறுதிருத்தம் செய்து (பக். 219) அதன் உண்மைநிலையை உணர்த்தியிருப்பது போற்றற்குரியதும் ஏற்றற்குரியதுமாகும். |
(13) ‘‘இயற்பெயர் முன்னர்’’ என்னும் நூற்பா உரையுள் ‘‘சாத்தந்தை’’ என்னும் வழக்கிற்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தைத் (பக்.286) தொல்லோர் மரபு பற்றித் ‘தை’ என்பதனை வருமொழியாகக் கூறாமல் ‘தந்தை’ என்பதையே வருமொழியாகக் கொண்டு கூறியுள்ளார் என அமைதி கூறியிருப்பது பெரிதும் பொருந்துவதாகும். |
(14) குற்றியலுகரப் புணரியலின் தொடக்கத்தில் - அவ் இயலின் பெயர்க்கு விளக்கங் கூறுமுகத்தான் தந்துள்ள தொகுப்பான ஆய்வுரை, நூன்மரபு முதலாக இவ்வதிகாரம்முழுதும் பரவியுள்ள குற்றுகர இலக்கணங்களை வகை தொகையாகப் பாகுபடுத்தித் தொடர்பு காட்டியுள்ள தெளிவை யாவரும் படித்து இன்புறக்கடவர். குற்றுகரம் செய்யுட்கண் அமையும் இயல்புகளைச் செய்யுளியலுரையுள் நிறைவு செய்வார் எனக்கருதுகிறேன். |
அறிவியலுக்கு ஒப்ப இப்புதியஉரை வரைந்த பாவலர் பாலசுந்தரனாரை இனி உரைப் பேராசிரியர் என அழைத்து அதனையே அவர்தம் இயற்பெயராக வழங்குவோமாக. உரைப்பேராசிரியர் வாழ்க! |
இராசப்பா நகர், தஞ்சாவூர் | இங்ஙனம் |
1-9-88 | பேரா. அ. கிருட்டிணமூர்த்தி |