அம்மவென்னும் அசைச்சொல்லினது நீட்டம், விளிகொள்ளும் பெயரொடு தோன்றாது, இடைச்சொல்லோடு தோன்றிற்றாயினும், விளியாகக் கொள்வர் தெளிவோர்; எ-று. எ - டு: அம்மா, சாத்தா என வரும். சாத்தா என்பதே எதிர்முகமாக்குமாயினும் , அம்மா என்பது அவ்வெதிர் முகமாக்குதலே குறித்து நிற்றலின் , விளியாகக் கொள்ளப்படுமென்பார் `விளியொடு கொள்ப' என்றார். (36)
|