5.பெயரியல்

பெயர்ச்சொல்லின் இலக்கணம்

160அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும்அஃறிணைக்குரிமையும்
ஆயிரு திணைக்குமோர் அன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.

பொருள் வேறுபாடு பற்றிச் சிறப்பு வகையான் நான்கு சொல்லு முணர்த்துதற்கு உபகாரமுடைய பொதுவிலக்கண முணர்த்தி, நிறுத்த முறையானே இனிப் பெயர்ச் சொல் உணர்த்துகின்றார்.

மேற் கூறப்பட்ட நான்கனுள், பெயரென்று சொல்லப் படுவன உயர்திணைக்குரியவாய் வருவனவும், அஃறிணைக்குரியவாய் வருவனவும், இரண்டு திணைக்கு மொத்த வுரிமையவாய் வருவனவுமென மூன்று வேறுபாட்டனவாம் தோன்று நெற்றிக்கண் ; எ-று.

(6)