நீயிர் நீ ஒருவரென்பனவற்றை இன்னபாற்பெயரென்றறியலுறின் சொல்லுவான் குறிப்பொடு கூட்டி முறையாலுணர்க ; எ-று. ஒரு சாத்தன், ஒருவனானும் ஒருத்தியானும் பலரானும் ஒன்றானும் பலவானுந் தன்னுழைச் சென்றவழி, நீ வந்தாய், நீயிர் வந்தீர்' என்னுமன்றே; ஆண்டது கேட்டான் இவ னின்னபால் கருதிக் கூறினான் என்பதுணரும். இனி ஒருவரொருவரைச் சார்ந்தொழுகலாற்றின், என்றவழிச் சொல்லுவானொடு கேட்டான் இவனொருமை குறித்தானென விளங்கும். பிறவுமன்ன. இனி இடமுங் காலமும் பற்றிப் பால் விளங்கும் வழியும் அறிந்து கொள்க. ஏகாரம் தேற்றேகாரம். முறையினுணர்த்தலென்பது பாதுகாவல். (39)
|