6.வினையியல்

வினைச்சொல்லின் பொது வியல்பு

காலம்

199காலந் தாமே மூன்றென1 மொழிப.

மேற்றோற்றுவாய் செய்யப்பட்ட காலம் மூன்றென்று சொல்லுவர் புலவர் ; எ-று.

தாமென்பது கட்டுரைச் சுவைபட நின்றது.

(2)

1."காலந்...மொழிப"என்றும், "இறப்பினிகழ்வினெதிர்வின்" என்றும் கூறியிருப்பதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ்வினை முக்காலமுங் குறித்தாமை தெளிவாம்.

"