8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`செல்லல்' `இன்னல்'

302செல்லல் இன்னல் இன்னா மையே.

மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல் (அகம்-22) எனவும் வெயில்புறந் தரூஉம், இன்ன வியக்கத்து (மலைபடு-374) எனவும் செல்லும் இன்னலும் இன்னாமை யென்னுங் குறிப்புணர்த்தும். எ - று.

(6)