8.உரியியல்

சிறப்பிலக்கணம்

`மழ' `குழ'

311மழவுங் குழவும் இளமைப் பொருள.

`மழகளிறு' (புறம் - 38) எனவும், `குழக்கன்று' (புறம் - 103) எனவும் , மழவுங் குழவும் இளமைக் குறிப்புப் பொருளுணர்த்தும் ; எ - று.

(15)