7.இடையியல்

சொல்லும் பொருளும்

அதனை உணரும் ஆற்றல்

393உணர்ச்சி வாயில் உணர்வோர் வலிதே.

வெளிப்படத் தொடர்மொழி கூறியானும் பொருளைக் காட்டியானும் உணர்த்தவும் உணராதானை உணர்த்தும் வாயிலில்லை; உணர்ச்சியது வாயில் உணர்வோர துணர்வை வலியாக வுடைத்தாகலான்; எ - று.

யாதானு மோராற்ற னுணருந் தன்மை அவற்கில்லையாயின் அவனை யுணர்த்தற் பாலனல்ல னென்றவாறு.

(97)