விளிகொள்வதன் கண்ணதாகிய விளியோடு தலைப்பெய்ய வேற்றுமை யெட்டாம்; எ-று. வேற்றுமை யென்பது அதிகாரத்தான் வந்தது. முன்னர், விளியெனப் படுப கொள்ளும் பெயரொடு தெளியத் தோன்றும் இயற்கைய வென்ப (சொல்-118) எனபவாகலின் , விளிகொள்வ தென்றது விளிகொள்ளும் பெயரை , அதன்கண் விளியென்றதனால் , பெயரு மன்று பெயரின் வேறு மன்று . விளி வேற்றுமையாவது திரிந்தும் இயல்பாயும் நிற்கும் பெயரிறுதி யென்பதாம். `வேற்றுமை தாமே யேழென மொழிப' (சொல் - 62) எனப் பிறர் மதங்1கூறி இச் சூத்திரத்தால் தந்துணி புரைத்தார்.2 (2)
1.பிறர் மத மென்றது தொல்காப்பியர்க்கு முந்தின பிற தமிழிலக் கணிகளின் மதத்தை 2. இக் கருத்து 74 - வது நூற்பா உரையில் வலியுறுத்தப்படுதல் காண்க.
|