2.வேற்றுமையியல்

வேற்றுமையின் வகை

வேற்றுமையின் பெயர்முறை

64அவைதாம்
பெயர் ஐ ஒடு கு
இன் அது கண்விளி யென்னும் ஈற்ற.

எட்டெனப்பட்ட வேற்றுமையாவன விளி வேற்றுமையை இறுதியாகவுடைய பெயர். ஐ , ஒடு , கு , இன் , அது , கண்ணாம் ; எ- று.

பெயர் ஐ ஒடு கு இன் அது கண் என்பன பல பெயர் உம்மைத்தொகை . அஃது ஒரு சொல்லாய் விளி யென்னுமீற்ற என்பதனான் விசேடிக்கப்பட்டது . பெயரும் ஐயும் ஒடுவும் குவ்வும் இன்னும் அதுவும் கண்ணும் என விரியும்.

சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்த லென்பதனான் ஒடுவென்றும் அது வென்றும் ஓதினாராகலின்1 ஆனுருபும் அகரவுருபுங் கொள்ளப்படும்.

விளிவேற்றுமையினது சிறப்பின்மை விளக்கிய பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னாது `விளியென்னு மீற்ற' எனப்பிரித்துக் கூறினார்.

(3)

1.108 - வது நூற்பாப் பார்க்க.