மேற் சொல்லப்பட்ட வேற்றுமையுள் , முதற்கட் பெயரென்று கூறப்பட்ட வேற்றுமையாவது பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாம் ; எ - று . பெயர் தோன்றிய துணையாய் நிற்கும் நிலைமையாவது , உருபும் விளியு மேலாது பிறிதொன்றனோடு தொகாது நிற்கும் நிலைமை , எனவே , உருபும் விளியுமேற்றும் பிரிதொன்றனோடு தொக்கும் நின்ற பெயர் எழுவாய் வேற்றுமையாகா தென்றவாறாம். எ - டு:ஆ , அவன் என வரும். (4)
|